இனி Hair Fall – லுக்கு சொல்லுங்க Bye.., Bye.., இந்த ஹேர் மாஸ்கை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

0
இனி Hair Fall - லுக்கு சொல்லுங்க Bye.., Bye.., இந்த ஹேர் மாஸ்கை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!
இனி Hair Fall - லுக்கு சொல்லுங்க Bye.., Bye.., இந்த ஹேர் மாஸ்கை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க!!

இதுவரை நாம் வேப்பிலை மற்றும் கற்றாழையை வைத்து சில நோய்களை குணப்படுத்துவதற்காக பயன்படுத்தி இருப்போம். ஆனா இப்போது நம்ம முடி வளர்ச்சிக்கு எப்படி பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம்.

Hair Fall

நம்மில் பல பெண்கள் மற்றும் ஆண்கள் பொதுவாக சந்தித்து வரும் பிரச்சனை தான் முடி உதிர்வு மற்றும் முடி வளர்ச்சியின்மை. இனி முடியை வளர்ப்பதற்கு கெமிக்கல் ஹேர் ஆயில் போன்றவற்றை தேடி நம்ம போக வேண்டிய அவசியமே இருக்காது. ஏன்னா இன்னைக்கு நம்ம வீட்டில் கிடைக்கும் வேப்பிலை மற்றும் கற்றாழை வைத்து எப்படி ஒரு ஹேர் மாஸ்க் செய்வது என்று பார்க்க போறோம். வாங்க அந்த ஹேர் மாஸ்க் செய்வது எப்படின்னு பார்க்கலாம்.

செய்முறை:

இந்த ஹேர் மாஸ்க் செய்வதற்கு முதலில் ஒரு கையளவு வேப்பிலையை எடுத்துக் கொள்ளவும், இத்தோடு சேர்த்து இரண்டு கீத்து கற்றாழை எடுத்துக் கொள்ள வேண்டும். கற்றாழையை தோல் நீக்கி விட்டு ஏழு தடவை தண்ணீரில் கழுவி சிறு துண்டாக நறுக்கி இத்தோடு வேப்பிலையையும் சேர்த்து மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். இத்துடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இப்பொழுது நமக்கு தேவையான வேப்பிலை மற்றும் கற்றாழை சேர்ந்த ஹேர் மாஸ்க் தயாராகிவிட்டது.

இந்த ஹேர் மாஸ்கை வாரத்தில் ஒரு முறை அரை மணி நேரம் தலையில் தேய்த்து பின்னர் குளித்து வரவும். சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் 1/4 நிமிடம் மட்டும் தலையில் தேய்த்து கொள்ளவும். இதனை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து வரும் நிலையில் இழந்த முடியை திரும்ப பெறுவதற்கும், முடி உதிர்வதை கட்டுப்படுத்துவதற்கும் நமக்கு மிகவும் யூஸ்புல்லாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here