மீன் பொழிச்சது ஒரு தடவை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.., அறுசுவையும் நாக்குல நடனமாடும்!!

0
மீன் பொழிச்சது ஒரு தடவை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.., அறுசுவையும் நாக்குல நடனமாடும்!!
மீன் பொழிச்சது ஒரு தடவை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.., அறுசுவையும் நாக்குல நடனமாடும்!!

இனி உங்க வீட்டில் மீன் வாங்குனா இன்னைக்கு நாம பாக்க போற ரெசிபியை செஞ்சு பாருங்க. கேரளா ஸ்டைல் மீன் பொழிச்சது எப்படி டிஃபரண்டா செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

  • 1. பாறை மீன் – 1
  • 2. வெங்காயம் – 250 கிராம்
  • 3. பச்சை மிளகாய் – 4
  • 4. தக்காளி – 3
  • 5.தேங்காய் – 1/4
  • 6.மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
  • 7.மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
  • 8. கரம் மசாலா -1 டீஸ்பூன்
  • 9. உப்பு – தேவையான அளவு
  • 10. நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன்
  • 11. தேங்காய் எண்ணெய் – 2 டீஸ்பூன்
  • 12. இஞ்சி,வெள்ளைப் பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்:

ஒரு பாறை மீனை எடுத்து மசால் தடவுவதற்கு ஏற்றவாறு கீறி விட்டுக்கொள்ளவும். மசால் ரெடி பண்ணுவதற்கு சின்ன பவுல் ஒன்றை எடுத்து 2 ஸ்பூன் மிளகாய் பொடி,1 ஸ்பூன் கரம் மசாலா,1/2 டீஸ்பூன் மஞ்சள், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸ் செய்து எடுத்து வச்சிருக்க பாறை மீனில் நல்லா தடவி வைத்துக்கொள்ளவும்.

இப்போ அதை சூடான தோசை சட்டியில் மூன்று ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு நல்லா பொரிச்சு எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு மிக்ஸி ஜார் எடுத்து அதில் 5 வெங்காயம், 4 பச்சை மிளகாய், 1/4 தேங்காய் சேர்த்து விழுது போல் அரைத்துக் கொள்ளவும். பின் வாணொலியை எடுத்து அடுப்பில் வைத்து அதில் மூன்று ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு போட்டு, நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்க்கவும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும். இதோடு நாம அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு அடுப்பை ஆப் செய்யவும். இப்போ நமக்கு மீன் பொழிச்சது செய்வதற்கு தேவையான கிரேவி ரெடி.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின் வாழை இலை எடுத்து அதில் நாம் தயார் செய்து வைத்துள்ள கிரேவியை சிறிதளவு போட்டு நடுவில் பொரித்து வைத்துள்ள பாறை மீனை வைத்து அதற்கு மேல் மீண்டும் ஒரு கரண்டி கிரேவியை ஊற்றி பின்பு வாழை இலையை நன்றாக நூல் வைத்து கட்டி விடவும். இப்பொழுது இதை தோசை சட்டியில் வைத்து பத்து நிமிடம் திருப்பி போட்டு சிறிதளவு எண்ணெய் ஊற்றி பொரித்து எடுத்துக் கொள்ளவும். நமக்கு டிஃபரண்டான கேரளா ஸ்டைல் மீன் பொழிச்சது ரெடியாயிடுச்சு. இப்படி ஒரு தடவ உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here