மூளை பகுதியில் ஏற்படும் கட்டியை கண்டறிய புதிய தொழில்நுட்பம் – சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் அசத்தல்!

0
மூளை பகுதியில் ஏற்படும் கட்டியை கண்டறிய புதிய தொழில்நுட்பம் - சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் அசத்தல்!
மூளை பகுதியில் ஏற்படும் கட்டியை கண்டறிய புதிய தொழில்நுட்பம் - சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் அசத்தல்!

மூளை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளை கண்டறியும் வகையில் சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் ஒரு தொழில்நுட்பத்தை உருவாகியுள்ளது.

புற்றுநோய் கண்டறியும் மிஷின்:

தற்போதைய காலகட்டத்தில் நோய் நொடி இல்லாமல் வாழும் மனிதர்கள் காணப்படுவது அரிதாக இருக்கிறது. வித்தியாச வித்தியாசமான உணவு முறைகளை கையாண்டு வருவதால், புது புது நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். அப்போதெல்லாம் நூற்றுக்கு ஒரு ஆளுக்கு தான் நோய் இருந்தது. தற்போது நூற்றுக்கு ஒரு ஆளை தவிர எல்லோருக்கும் நோய் இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதற்கு உதாரணமாக கொரோனா வைரஸை சொல்லலாம். அதற்கடுத்து, மனிதர்களை வாட்டி வதைக்கும் நோய் என்றால் அது புற்றுநோய் தான். இந்த நோய்க்கு மட்டும் இன்று வரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் மூளை மற்றும் முதுகு தண்டுவடப் பகுதியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கட்டிகளை கண்டறியும் வகையில் மெஷின் லேர்னிங் சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி விஞ்ஞானிகள் குழு உருவாக்கியுள்ளது. சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, க்ளியோ பிளாஷ்டோமா என்பது மூளை மற்றும் முதுகு தண்டு வடத்தில் வேகமாகவும் தீவிரமாகவும் வளரும் கட்டியாகும்.

மூத்த குடிமக்களே., ரயில் பயணத்திற்கான கட்டண சலுகை?? வெளியான முக்கிய தகவல்!!!

இதை எளிதாக கண்டுபிடிக்கும் விதமாக ஐஐடி உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர் மைக்கேல் குரோமிஹா, ஆராய்ச்சி மாணவி மேத்தா பாண்டே. தனுஷா யேசுதாஸ், அனுஷா பரு சூரி ஆகியோர் இணைந்து மெஷின் லேர்னிங் சார்ந்த கணினி தொழில்நுட்பத்தை கண்டுபிடித்துள்ளனர். மேலும் இந்த மிஷினை வைத்து, எந்த வகையான நோயையும் இதன் மூலம் கண்டறியலாம் என்பது இதன் சிறப்பு அம்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here