உடலுக்கு ஆரோக்கியம் தரும் மட்டன் ஈரல் தோரன்… இப்படி ஒரு தடவ செஞ்சு பாருங்க!!!

0

அசைவ உணவை பிடிக்காதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். எனினும் மட்டன் மற்றும் சிக்கன் கறி சாப்பிடும் சிலர், அதன் ஈரலை சாப்பிட தயங்குவர். மேலும் இதில் அதிக சத்து இருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடலுக்கும் ஆரோக்கியம் தரும். அப்படிப்பட்ட இந்த ஈரலை இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள படி செய்து கொடுங்கள். அதாவது மட்டன் ஈரல் தோரன் இந்த முறையில் செய்தால் மிச்சம் மீதி இல்லாமல் தட்டு முழுவதும் காலியாகி விடும்.

தேவையான பொருட்கள்

மட்டன் ஈரல் – 150 கிராம்

வெங்காயம் – 2

மிளகாய் வற்றல் – 3

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி

சீரகம் – 1/4 தேக்கரண்டி

கடுகு – 1/4 தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி

தேங்காய் துருவல் – 1/2 கப்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

முதலில் மட்டன் ஈரலை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும். இதையடுத்து தேங்காய் துருவல், சீரகம், மஞ்சள் தூள், மிளகாய் வற்றல் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்து கொள்ள வேண்டும்.அதன் பின்னர் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வற்றல்  மற்றும் கறிவேப்பிலை சேர்த்து  தாளித்து கொள்ளவும். அதன் பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு சுத்தம் செய்து வைத்து உள்ள மட்டன் ஈரலை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். முக்கால் வாசி தண்ணீர் வற்றி ஈரல் நன்கு வெந்து வரும் வேளையில் அரைத்து வைத்து உள்ள தேங்காய் கலவையை சேர்த்து நன்றாக பச்சை வாடை போகும் வரை கிளறிக் கொள்ளவும். அதன் பின்னர் தண்ணீர் முழுவதும் வற்றி தோரன் பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து இறக்கி விட வேண்டும். தற்போது சுவையான மணமான மட்டன் ஈரல் தோரன் தயார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here