வந்தாச்சு.., வந்தாச்சு.., ரேஷன் கடைகளில் வந்த புது மாற்றம்.., இனி தமிழகம் முழுவதும் அமல்!!!

0
வந்தாச்சு.., வந்தாச்சு.., ரேஷன் கடைகளில் வந்த புது மாற்றம்.., இனி தமிழகம் முழுவதும் அமல்!!!
வந்தாச்சு.., வந்தாச்சு.., ரேஷன் கடைகளில் வந்த புது மாற்றம்.., இனி தமிழகம் முழுவதும் அமல்!!!

ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் தமிழக அரசால் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த பொருட்கள் அனைத்தும் மக்களுக்கு சரியான முறையில் கிடைக்க முறைகேடுகள் எதுவும் நடைபெறாமல் இருக்கவும் பல திட்டங்களை அரசு அமல்படுத்தி வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கிய ஒரு திட்டத்தால் தமிழக மக்கள் பயனடைந்துள்ளனர். அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு “நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை” என்ற திட்டத்தை இவர் தொடங்கினார். இந்த திட்டத்தின் மூலம் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் ரேஷன் கடைகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இப்போது பெரும்பாலான ரேஷன் கடைகள் பழுதடைந்து கிடைப்பதால் அவைகளை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

ரெடியாகிக்கோங்க மக்களே.., நாளைக்கு இந்த பகுதிகளில் மின்சாரம் கட்.., மின்வாரியம் அறிவிப்பு!!

மேலும் இனி சீரமைக்கப்படும் கடைகளில் கழிப்பறை வசதி, மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல சாய்வு தள வசதி, முதியோர் அமர ஓய்விருக்கை போன்ற வசதிகள் அமல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இந்த கடைகளுக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று பெறப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 3,000 கடைகள் சீரமைக்கப்பட்டு, 5,784 கடைகளுக்கு சர்வதேச தரச் சான்று கிடைத்துள்ளது. மேலும் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here