இந்தியாவில் சமீப காலமாக முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் வசதிக்காக இலவசமாக சிம் கார்டுகளை வழங்கி வந்தனர். இதனால் பலரும் போலி ஆவணங்களை வைத்து ஒன்றுக்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை வாங்கி மோசடி சம்பவங்களை செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் பலரும் தங்களுக்கு வரும் போலி அழைப்புகளை நம்பி லட்சக்கணக்கில் பணத்தை இழந்துள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
எனவே இது போன்ற மோசடிகளை தடுக்க தொலைத்தொடர்பு துறை விசாரணையில் ஈடுபட்ட நிலையில் ஒரே பெயரில் ஆயிரக்கணக்கான சிம் கார்டுகள் வாங்கப்பட்டது தெரியவந்துள்ளது. அதன்படி மோசடியில் ஈடுபட்டு வந்த 52 லட்சம் செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் 8 லட்சம் வாலெட், 66,000 whatsapp கணக்குகளும் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இனி வரும் காலங்களில் இது போன்ற மோசடிகள் நடைபெறாமல் இருக்க தொலைத்தொடர்பு நிறுவனம் அக்டோபர் 1ஆம் தேதி முதல் சிம் கார்டு வாங்க புது ரூல்ஸ்களை விதித்துள்ளனர்.
Spicy One Chip சாப்பிட்ட சிறுவன்.., பரிதாபமாக உயிரிழந்த கொடூரம்.., விளையாட்டே வினையாகிவிட்டதே!!!
- செப்டம்பர் 30ம் தேதிக்கு மேல் வாடிக்கையாளரின் விவரங்களை பதிவு செய்யாமல் சிம் விற்பனை செய்வோரின் மீது 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.
- இதுவரை ஆக்டிவேட் செய்யப்பட்ட சிம்களை உடனடியாக சரி பார்த்து அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- டீலர்கள் தங்களை ரெஜிஸ்டர் செய்து கொள்ள CIN நம்பர், LLPIN நம்பர், ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் வரி பதிவு சான்றிதழ் உள்ளிட்ட விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.