
நாடு முழுவதும் புகைபிடித்தல், மது அருந்துதல் குறித்து எத்தனையோ விளம்பரங்கள் வந்தாலும் யாரும் அதை கொஞ்சம் கூட பொருட்படுத்துவதில்லை. சிகரெட், பீடி, பான் பொருட்கள், புகையிலை மெல்லுதல் போன்றவற்றை பயன்படுத்துவதால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. இதனால் இதை சரி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அந்த வகையில் போர்ச்சுக்கல் அரசு வரும் 2040 ஆம் ஆண்டுக்குள் புகைபிடித்தல் இல்லாத நாடாக திகழ வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதில் முதல் படியாக நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தால் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், மருத்துவமனைகள் அல்லது விளையாட்டு அரங்குகள், உணவகங்கள், பார்கள் மற்றும் காபி கடைகள் போன்ற பொதுக் கட்டிடங்களுக்கு அருகில் புகைபிடிப்பது அக்டோபர் 23 முதல் தடை செய்யப்படும்.
TNPSC குரூப் 4 தேர்வில் 10,117 பணியிடங்களுடன் கூடுதலாக பணியிட அறிவிப்பு?? முக்கிய தகவல்!!!
இது தவிர வரும் 2025 ஆண்டில் உரிமை பெற்ற கடைகளில் மட்டும் புகையிலை பொருட்கள் விற்க அனுமதி தரப்படும். அப்படியே புகைபிடித்தாலும் தனிமைப்படுத்தப்பட்ட பார்கள், உணவகங்கள், இரவு விடுதிகள் மட்டுமே புகைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சிலர் இது போன்ற சட்டங்களை ஏற்க மறுப்பதால், நடைமுறைப்படுத்த தாமதம் ஏற்படும் என போர்ச்சுகல் அரசு தெரிவித்துள்ளது.