என்னடா.., ஸ்விங் பவுலர்களுக்கு வந்த சோதனை.., ICC விதித்த அறிவிப்பால் குழப்பத்தில் வீரர்கள்!!

0
என்னடா.., ஸ்விங் பவுலர்களுக்கு வந்த சோதனை.., ICC விதித்த அறிவிப்பால் குழப்பத்தில் வீரர்கள்!!
என்னடா.., ஸ்விங் பவுலர்களுக்கு வந்த சோதனை.., ICC விதித்த அறிவிப்பால் குழப்பத்தில் வீரர்கள்!!

பந்து வீச்சாளர்கள் அனைவருக்கும் ICC புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதனால் வீரர்கள் செய்வதரியாமல் வருத்தத்தில் உள்ளனர்.

தடை விதித்த ICC

கிரிக்கெட் உலகில் என்னதான் பேட்ஸ்மேன்கள் சாதித்தாலும், பந்து வீச்சாளர்கள் கைகொடுத்தால் தான் வெற்றி கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கும். அதன் படி பந்து வீச்சாளர்கள் என்று சொன்னாலே அனைவருக்கும் நினைவில் வருவது புவனேஷ் குமார் மற்றும் ஆண்டர்சன் தான். ஏனென்றால் பந்து வீச்சில் இவர்கள் படைக்காத சாதனையே இல்லை. மேலும் இவர்கள் இருவரும் ஸ்விங் பந்து வீச்சில் கைதேர்ந்த வல்லவர்கள்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இவர்களின் ஸ்விங் பந்து வீச்சை எதிர்கொள்வதற்கு பேட்ஸ்மேன்கள் மிகவும் திணறுவார்கள். ஆனால் தற்போது இந்த பந்து வீச்சாளர்களுக்கு ICC புதிய விதிமுறையை அறிவித்துள்ளது. அதாவது பந்து வீச்சாளர்கள் அனைவரும் பவுலிங் செய்யும் போது பந்தை எச்சில் துடைப்பது வழக்கம். அப்படி செய்யும் போது பந்து இன்னும் அதிகமாக ஸ்விங் ஆகும்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்து நியூசிலாந்து., உலக கோப்பையில் இந்திய அணிக்கு காத்திருக்கும் ஆபத்து!!

ஆனால் இனி வரும் கிரிக்கெட் போட்டிகளில் வீரர்கள் எச்சில் மூலம் பந்தை துடைப்பதற்கு ICC நிரந்தர தடை விதித்துள்ளது. ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக எச்சிலில் பந்தை துடைப்பதற்கு தடை இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து அக்டோபர் 1ம் தேதி முதல் நிரந்தர தடை விதிக்க சர்வதேச கிரிக்கெட் வாரியம் முடிவெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here