வாகன ஓட்டிகளே உஷார்., இனி இத செஞ்சாலும் குற்றம் தான்? வீடு தேடி வரும் அபராத ரசீது!!!

0
வாகன ஓட்டிகளே உஷார்., இனி இத செஞ்சாலும் குற்றம் தான்? வீடு தேடி வரும் அபராத ரசீது!!!
வாகன ஓட்டிகளே உஷார்., இனி இத செஞ்சாலும் குற்றம் தான்? வீடு தேடி வரும் அபராத ரசீது!!!

தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு நிர்ணயித்து வருகிறது. அந்த வகையில் பெங்களூரில் நடைமுறையில் உள்ளதை போல சென்னையிலும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்கு பதிலாக போட்டோ மட்டும் எடுத்து கொள்கிறார்கள். இதன்மூலம் வாகன எண்ணில் குறிப்பிட்டுள்ள முகவரி மற்றும் மொபைல் எண்ணுக்கு அபராத தொகை அனுப்பப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படியாக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு உள்ளிட்ட அவசர வாகனங்களுக்கு வழிவிடாமல் செல்பவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தேவையில்லாமல் ஒலி எழுப்புவது, வீலிங் மற்றும் அளவுக்கு மீறி சரக்கு ஏற்றுவது உள்ளிட்ட வாகனங்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.20,000 வரை சட்ட விதிக்குட்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் வாட்சப், ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து ஊடகங்களிலும் பதிவிடப்படும் போக்குவரத்து விதிமீறல் பதிவுகளை கண்காணித்து உடனடி நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சில புதிய விதிமீறல்கள் போக்குவரத்து விதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விலகியதில் இருந்தே லக்கு தான்.., அடுத்த பரிமாணத்திற்கு உயர்ந்த காவியா!!

அந்த வகையில் டிராபிக் நிலையத்தில் ரெட் சிக்னல் இருக்கும் போது ஸ்டாப்லைனை தாண்டி வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஜீப்ரா கிராஸில் நடக்கும் பொதுமக்களுக்கு கடும் சிரமத்தை விளைவிக்கிறது. இதனால் ரெட் சிக்னல் போட்டபிறகு ஸ்டாப்லைனை தாண்டி நிறுத்துவோருக்கு ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மட்டுமில்லாமல் பின்னாடி அமர்ந்து வருபவர்க்கும், ரேஸிங், ரெஜிஸ்ட்ரேஷன் இல்லாத வாகனம் என ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் விதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை போக்குவரத்து போலீசார் நேற்று சென்னையில் 287 இடங்களில் மேற்கொண்டனர். இந்த அபராத திட்டம் இன்று (மார்ச் 27) முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here