ஓடிடி-யில் வெளியாகும் லேடி சூப்பர் ஸ்டாரின் 3 திரைபடங்கள்…குஷியில் ரசிகர்கள்..!!!

0

கொரோனா தொற்று காரணமாக முன்போல் திரைப்படங்களை திரையரங்குகளுக்கு சென்று பார்ப்பது என்பது கடினம். எனவே ஓடிடி தளங்கள் அதற்கு மாற்று வழியாக உள்ளது. மேலும் இதில் பல படங்கள் வெளிவந்து வெற்றியும் பெற்றுள்ளது. இப்பொழுது நடிகை நயன்தாராவின்  3 திரைப்படங்கள் ஓடிடி-யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

 

தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்களின் ஒரே பொழுது போக்காக இருப்பது சினிமாக்கள் மட்டுமே. மேலும்  தொலைக்காட்சியை பொறுத்தவரை போட்ட படங்களையே போட்டு அவர்களின் பொறுமையை இழக்க வைத்து விட்டனர்.இதனால் சினிமா ரசிகர்கள் ஓடிடி தளங்களுக்கு தாவி உள்ளனர். இதனால் பல நல்ல படங்களை குறிவைத்து அவற்றை வாங்கி போட்டா போட்டி போட்டுக்கொண்டு தங்கள் தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை தங்கள் பக்கம் ஈர்த்து  வருகின்றன ஓடிடி தளங்கள்.

இந்த வரிசையில் சூரரைப் போற்று, பூமி, பொன்மகள் வந்தாள், பென்குயின் போன்ற பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியிட்டன. இந்த நிலையில் நடிகையின் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படமும் ஒன்றாகும். தற்போது நயன்தாராவின் 3 படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது. அவர் நடிப்பில் உருவான நெற்றிக்கண் திரைப்படம், விக்னேஷ் சிவனுடன் அவர் சேர்ந்து தயாரித்த கூழாங்கல் திரைப்படம்,மேலும் ராக்கி படத்தின் வெளியீட்டு உரிமையையும் நயன்தாரா வாங்கி உள்ளார். மிக விரைவில் இந்த 3 திரைப்படங்களையும் ஓடிடி தளத்தில் எதிர்பாக்கலாம்.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here