தமிழகத்தில் புதிய தளர்வுகள் இன்று முதல் அமல்… டீ கடைகள், இ-சேவை மையங்கள் திறப்பு!!!

0

கொரோனா பரவல் நாடு முழுவதும் பரவி வந்த நிலையில் முழு ஊரடங்கானது அமல்படுத்தபட்டது. அதன் பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது.  இந்நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது இன்று காலையுடன் முடிவடைந்த நிலையில் டீ கடைகள், இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகள்  திறக்கலாம் போன்ற சிலவற்றிற்கு அனுமதி அளித்து தமிழக முதல்வர் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து இன்று முதல் அவை அனைத்தும் அமலுக்கு வந்தன.

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முழு ஊரடங்கானது பிறப்பிக்கப்பட்டது. இதனால் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியது. எனவே அந்த அந்த மாநில நிலைமைக்கு ஏற்ப மற்றும் மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று காலையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது முடிவடைந்தது. மேலும் பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து தமிழக முதல்வர் சில தளர்வுகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

அதாவது ,கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் தேநீர் கடைகள் மற்றும் இ-சேவை மையங்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும்  மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில்,நோய்ப்பரவல் குறையாத  கோவை உள்ளிட்ட ஏழு மேற்கு மாவட்டங்கள் மற்றும் தஞ்சை உள்ளிட்ட நான்கு டெல்டா மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி11 மாவட்டங்கள் தவிர, மீதம் உள்ள  27 மாவட்டங்களில் இன்று  முதல், தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டுமே  அதுவும் பாத்திரங்களைக் கொண்டு வந்து வாங்கி செல்ல  வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும் இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம்.  இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.மக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் இன்று முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கட்டுமான பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த தளர்வுகள் அனைத்தும் இன்றும் முதல் அமலுக்கு வந்தன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here