‘கர்ணன்’ வெற்றியை தொடர்ந்து புதிய சாதனை – கொண்டாட்டத்தில் படக்குழு!!

0

தனுஷ் நடிப்பில் வெளியாகி மக்களின் மனதை கவர்ந்த கர்ணன் திரைப்படமானது மாரிசெல்வராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளியானது. தற்போது படம் வெளியாகி 50 நாள் கடந்து மக்களின் ஆதரவை பெற்று வருகிறது.

அசுரனின் கர்ணன் :

தற்போது சமீப காலமாக நடிப்பின் அசுரன் என மக்களால் அன்பாக அழைக்கப்படுவர் தான் தனுஷ். தன் நடிப்பின் மூலம் மக்கள் அனைவரையும் ஈர்த்துள்ளார். தான் தேர்ந்தெடுக்கும் கதை மக்களை எளிதில் சென்றடைய வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளார் நடிகர் தனுஷ். கடைசியாக தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது அசுரன் திரைப்படம். அதனை தொடர்ந்து விருதுகள் பல வாங்கிய “பரியேறும் பெருமாள்” பட இயக்குனர் மாரிசெல்வராஜ் உடன் இணைந்து கர்ணன் திரைப்படத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சாதி அமைப்பை அடிப்படையாக கொண்ட இப்படத்தை மூத்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு அவர்கள் தயாரித்தார். சாதி அமைப்பினை அடிப்படையாக கொண்டு உரிமைகளுக்காக போராடும் சமூகத்தின் கதையை மையமாக வைத்து உணர்வு பூர்வமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வசூலை அள்ளியது. தற்போது படம் வெளியாகி 50 நாள் ஆன நிலையில் ரசிகர்களும் திரைபடக்குழுவும் கொண்டாடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here