தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விவகாரம்.., புதிதாக வெடித்த பிரச்சனை.., வெளியான பகீர் அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு விவகாரம்.., புதிதாக வெடித்த பிரச்சனை.., வெளியான பகீர் அறிவிப்பு!!!
தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான பணிகள் துவங்கியதால் புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது ஏழு மாதங்கள் கடந்தும் இன்னும் இந்த பணி துவங்காமல் உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு மக்கள் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளனர்.
எனவே புதிய ரேஷன் கார்டு வராததால் மக்கள் பொருட்கள் வாங்க முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான பணிகள் அடுத்த மாதம் முதல் துவங்க உள்ளது. இதனால் புதிய ரேஷன் கார்டு கிடைக்குமா? கிடைக்காதா? என்ற அச்சத்தில் பொதுமக்கள் அனைவரும் உள்ளனர். இதனால் மக்களவைத் தேர்தல் துவங்குவதற்கு முன்பாக புதிய ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here