
இந்தியாவின் பெயர் பாரத குடியரசு என மாற்றப்படுவதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது. மேலும் இதை உறுதியாக்கும் வகையில் ஜி 20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கு அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குடியரசு தலைவர் மாளிகைக்கான அழைப்பிதழிலும் பாரத குடியரசுத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது அனைவரிடமும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இந்தியாவின் பெயர் மாற்றுவது தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அப்படி ஒருவேளை இந்தியாவின் பெயர் மாற்றப்பட்டால் பொதுமக்கள் பல்வேறு சிக்கல்களை சந்திப்பார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது இந்தியாவின் பெயரை பாரத குடியரசு என மாற்றினால் இந்தியாவின் ஆதார் கார்டு முதல் பாஸ்போர்ட் வரை அனைத்து ஆவணங்களும் செல்லாததாக கருதப்படும். மேலும் இந்த ஆவணங்களிலும் இந்தியாவின் பெயர் மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அது மட்டுமல்லாமல் இந்தியாவின் ரூபாய் மதிப்பும் செல்லாததாகிவிடும்.
தமிழக பள்ளி மாணவர்களே., மாதம் ரூ.1,500 உதவித் தொகை., உடனே விண்ணப்பியுங்கள்!!!
ஒரு வேலை ஆதார், பாஸ்போர்ட் போன்ற அனைத்து ஆவணத்திலும் பொதுமக்கள் பெயர் மாற்ற வேண்டும் என்றால் அலுவலகங்கள் முன் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டிய அவலம் ஏற்படும். மேலும் இதை மாற்றுவதை காரணமாக கொண்டு அதிகாரிகளும் லஞ்சம் வாங்கலாம் எனவும் கூறி வருகின்றனர் இதனால் இந்தியாவின் பெயரை மாற்றுவதில் மத்திய அரசு என்ன முடிவு எடுப்பார்கள் என பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.