‘இனி ஊழியர்களின் சம்பளம் குறையாது’ – புதிய ஊதிய விதியை ஒத்திவைத்த மத்திய அரசு!!

0
Withdraw Money

ஏப்ரல் 1 முதல் புதிய ஊதிய விதி அமலுக்கு வரும் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அதனை ஒத்திவைத்திருப்பதாக அறிவித்துள்ளது. இதனால் ஊழியர்களின் சம்பளம் குறையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விதி

இன்று முதல் புதிய நிதியாண்டு தொடங்கிய நிலையில் தற்போது பல பொருட்களின் விலை குறைந்துள்ளது. கேஸ் சிலிண்டரின் விலையும் குறைந்ததால் இல்லத்தரசிகள் பலரும் நிம்மதியடைந்தனர். இந்நிலையில் புதிய ஊதிய விதியை நடைமுறைப்படுத்த போவதாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Salary
Salary

அதாவது இந்த புதிய ஊதிய விதிப்படி ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் சலுகைகள் 50% அதிகமாக இருக்க கூடாது. ஏனெனில் சில நிறுவனங்கள் சம்பளத்தை குறைத்து இன்சென்டிவ், அலோவன்ஸ் போன்றவற்றை அதிகமாக கொடுத்து வருகின்றனர். ஆனால் ஊதிய ஊதிய கொள்கை அமலுக்கு வந்தால் சம்பளம் அதிகரிக்கும், அலோவன்ஸ் போன்றவை குறையும். இதனால் சம்பளத்துடன் CTC அதிகரிக்கும்.

ஏப்ரல் 5 வரை கூகிள் பே, போன் பேவுக்கு தடை?? தேர்தல் அதிகாரிக்கு மனு!!

சம்பளம் அதிகரிக்கும் போது பிஎப் செலுத்துவதும் அதிகரிக்கப்படும். இதனை ஏப்ரல் 1 முதல் அமலுக்கு கொண்டு வர போவதாக தெரிவித்திருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த புதிய ஊதிய விதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுவரையிலும் பழைய ஊதிய முறை தான் தொடரும் என்றும் அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here