ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் – பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினர்!!

0

டெல்லியில் புதிதாக தொடங்க உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டினர் பிரதமர் மோடி. தற்போது செயலில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டு ஆகின்றன. இக்கடிதத்தை இடித்துவிட்டு புதிதாக ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் நாடாளுமன்ற கட்டிடத்துக்கு மோடி அடிக்கல் நாட்டினர். இந்நிகழ்ச்சி இணையத்தில் ஒளிபரப்பப்பட்டது.

நாடாளுமன்ற புதிய கட்டிடம்

இந்திய நாடாளுமன்றம் என்பது இந்தியக் குடியரசு நாட்டில் சட்டம் இயற்றும் அதிகாரம் கொண்ட மன்றமாகும். இது மாநிலங்களவை (Rajya Sabha) மற்றும் மக்களவை (Lok Sabha) என்று இரு பகுதிகளைக் கொண்டுள்ளது. நாடாளுமன்றம் அல்லது இந்தியில் சன்சத் பவன் எனப்படும் இக்கட்டிடம் மண்டபம் வட்டவடிவ அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. இதை வடிவமைத்து நிர்மானித்தவர்கள் சர் எட்வின் லுத்தியன்ஸ் மற்றும் சர் எர்பர்ட் பேக்கர். பிரித்தானிய கட்டிடக் கலை வல்லுநரான இவர்கள் 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சவ்சாத் யோகினி கோவிலின் தோற்றமே இந்திய நாடாளுமன்றத்தின் முன்மாதிரி என்று கூறுகிறார்கள்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதன் வெளி கட்டுமான சுவர் 144 பளிங்குத்தூண்களால் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து குடியரசுத்தலைவர் மாளிகைக்கு செல்வதற்கு ஏதுவாக பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதன் தோற்றத்தை இந்திய கேட் பகுதியில் இருந்தும் பார்க்கமுடியும்.இப்படிப்பட்ட பல்வேறு அம்சங்களை கொண்ட நமது தலைநகர் டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் கடந்தது. இந்நிலையில்,பழைய கட்டிடத்துக்கு அருகிலே புதிதாக நாடாளுமன்ற கட்டிடம் அமைய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தற்சார்பு இந்தியாவின் லட்சியத்தில் புதிய பரிமாணமாக அமையவுள்ள இக்கட்டிடம் சுதந்திரத்துக்கு பிறகு காட்டப்டுள்ள மிக பெரிய தொழில்நுட்பம் வாய்ந்த புதிய இந்தியாவின் வளர்ச்சிப்பாதையை காட்டும் கட்டிடமாக அமையும் என்கிறார்கள். மேலும் தனது 75வது சுதந்திரத்தை 2022ம் ஆண்டு இந்த புதிய கட்டிடத்தில் கொண்டாடப்போவதாகவும், புதிய இந்தியாவின் தேவைகள்,மற்றும் நோக்கங்களை பூர்த்தி செய்யும் வகையிலும் இருக்கும் என்று கூறினார். புதிதாக அமைய உள்ள கட்டிடம் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது.

முக்கோணவடிவமாக அதிநவீன பாதுகாப்பு வசதிகளோடு, நவீன தொழில் நுடட்பத்தை கொண்டு, மின்சாரத்தை சிக்கனமாக உபயோகிக்கும் வகையிலும் இக்கட்டிடம் கட்டப்படப்போகிறது. தற்போதுஉள்ள நாடாளுமன்ற கட்டிடத்தை விட 3 மடங்கு பெரியது. தற்போதுஉள்ள மாநிலங்களவையின் அவைகளை விட குறிப்பிடத்தக்க அளவு விசாலமான அவைகள் இருக்கும். இக்கட்டிடத்தின் உட்புறப் பகுதிகள் இந்திய கலை மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். பொதுமக்கள் வந்து பார்க்கக்கூடிய மத்திய அரசியலமைப்பு கண்காட்சி கூட அமைப்பும் கட்டிட வடிவமைப்பு வரைபடத்தில் உள்ளது.

பசுமையான தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும், சுற்றுச்சூழலுக்கு உகந்த நடவடிக்கைகளை கொண்டும், வேலையில்லாதவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி, பொருளாதாரத்திற்கு வழிவகுக்கும் வகையிலும் இக்கட்டிடம் இருக்கும். மேலும், உயர்ந்த ரக ஒளி-ஒலி அமைப்புகள், மேம்படுத்தப்பட்ட வசதியான இருக்கைகள், அவசரகால வெளியேறும் வசதிகள் ஆகியவற்றை இக்கட்டிடம் கொண்டிருக்கும். நில அதிர்வு காலத்தில் தேவையான உயர்ரக கட்டமைப்பு பாதுகாப்பு தரநிலைகளை உறுதிப்படுத்தும் வகையிலும், பராமரிப்பு மற்றும் செயல்பாடுகள் எளிதாக இருக்கும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மக்களவை தலைவர் திரு. ஓம் பிர்லா, நாடாளுமன்ற அமைச்சர் திரு. பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற இணையமைச்சர் திரு. ஹர்தீப் சிங் புரி மற்றும் மாநிலங்களவையின் துணை தலைவர் திரு. ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர். மேலும் இந்த நிகழ்ச்சி இணையத்தில் நேரலை செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here