சுட சுட நாட்டுக்கோழி கறி குழம்பு.., இப்படி ஒரு வாட்டி ட்ரை பண்ணிப்பாருங்க!!

0
சுட சுட நாட்டுக்கோழி கறி குழம்பு.., இப்படி ஒரு வாட்டி ட்ரை பண்ணிப்பாருங்க!!
சுட சுட நாட்டுக்கோழி கறி குழம்பு.., இப்படி ஒரு வாட்டி ட்ரை பண்ணிப்பாருங்க!!

கறி குழம்புனாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது நாட்டுக்கோழி குழம்பு தான். அதிலும் சுட சுட ஆவி பறக்க இட்லி கூட கறிக்குழம்பு சாப்பிடறப்போ அந்த சுவை அப்படியே நம்ம நாக்குல ஒட்டிக்கிரும். அப்படிப்பட்ட சுவையான நாட்டுக்கோழி கறி குழம்பு செய்வது எப்படின்னு பாப்போம் வாங்க

தேவையான பொருட்கள்:

1.நாட்டுக்கோழிக்கறி -1/2 கிலோ
2.சின்ன வெங்காயம் -100 கிராம்
3.தக்காளி -2
4.கருவேப்பிலை,கொத்தமல்லி -தேவையான அளவு
5.பட்டை ,கிராம்,சோம்பு -தேவையான அளவு
6.மஞ்சள் பொடி- 1/4 டீஸ்பூன்
7.மிளகாய் பொடி-2 டீஸ்பூன்
8.மல்லி பொடி- -2 டீஸ்பூன்
9.உப்பு மற்றும் தண்ணீர் -தேவையான அளவு.

அசிங்கப்பட்டு வீட்டை விட்டு வெளியேறிய ராதிகா.., இனியாவை பழிதீர்க்க போடப்படும் சதித்திட்டம்.., பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!

செய்முறை:

கோழி கறி குழம்பு செய்வதற்கு முதலில் அரைக்கிலோ கோழி கரியை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வானொலியை அடுப்பில் வைத்து காய்ந்தவுடன் அதில் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்ற வேண்டும் பிறகு அதில் பட்டை, கிராம், சோம்பு இந்த மூன்றையும் போட்டு தாளிக்க வேண்டும். அதில் நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம் துண்டுகளை போட்டு நன்றாக வதக்கி பொன்னிறமாக வந்தவுடன் அதில் நறுக்கி வைத்த தக்காளியை போட்டு வதக்க வேண்டும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இஞ்சி பூண்டு வெங்காயம் இந்த மூன்று சேர்த்து அரைத்த விழுதையும் போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். பிறகு கழுவி வைத்துள்ள நாட்டுக்கோழி கறியை அதில் போட்டு நன்றாக கிளறி விடவும் . இப்பொழுது மஞ்சள் பொடி, மிளகாய் பொடி, மல்லி பொடி மூன்றையும் தேவையான அளவு போட்டு நன்றாக மசால் வாடை போகும் வரை கிண்டி விடவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு மூடி விடவும் 15 நிமிடங்களுக்கு பிறகு பார்த்தால் தண்ணியும் எண்ணெயும் பிரிந்து வரும். அப்பொழுது மல்லி தலையில் அதன் மேல் போட்டு இறக்கி வைத்தால் சுட சுட செ ட்டு நாட்டு கறி குழம்பு ரெடி ஆகிவிடும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here