அதிகரிக்கும் பாலியல் புகார்..,  அரசு எடுத்த அதிரடி முடிவு? என்னனு தெரியுமா?

0
அதிகரிக்கும் பாலியல் புகார்..,  அரசு எடுத்த அதிரடி முடிவு? என்னனு தெரியுமா?

தற்போதைய டிஜிட்டல் உலகத்தில் ஏராளமான பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனை தடுக்கும் விதமாக அரசாங்கம் கடுமையான சட்டம் கொண்டு வந்த போதிலும், இது மாதிரியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது.

குறிப்பாக மடகாஸ்கர் நாட்டில் அதிகமான புகார்கள் ஏழுந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மடகாஸ்கர் அரசு ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதாவது, 10 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு அறுவை சிகிச்சை மூலமாகவும், 10-13 வயது குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு அறுவை சிகிச்சை (அல்லது) ரசாயன முறையிலும், 14-17 வயது குழந்தைகள் மீதான குற்றங்களுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

TNPSC குரூப் 4 தேர்வர்களே…, தேர்வில் வெற்றி பெற இது மிகவும் முக்கியம்…, முழு விவரம் உள்ளே!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here