Tuesday, April 23, 2024

மும்மொழி கல்வி, 5ம் வகுப்பு வரை தாய்மொழிப் பாடம் – புதிய கல்வி கொள்கை விபரங்கள்!!

Must Read

தற்போது நாம் பின்பற்றும் கல்வி கொள்கையை மாற்ற  பிரதமர் மோடி ஒப்புதல் அளித்தார், அதன்படி இன்று அந்த மாற்றப்பட்ட கல்வி கொள்கையை பற்றி பார்ப்போம்.

கல்வி நிலை மாற்றம்:

நாம் தற்போது பின்பற்றுவது, 10 + 2 என்னும் கல்வி கொள்கையாகும். தற்போது நம் பின்பற்றி வரும் சர்குலர் அமைப்பில் இருந்து கற்பித்தல் அமீபிக்கு மாற்றப்பட்டுள்ளது. இது பள்ளிப்பருவ மாணவர்களுக்கு பொருந்தும். வயது வாரியாக அனைத்தும் ஒன்று தான், ஆனால் பிலே ஸ்கூல் எனப்படும் சிறுகுழந்தைகளுக்கான பள்ளியும், கல்வியாண்டுகளில் சேர்க்கப்பட உள்ளது.

தகுந்த காரணம் இன்றி கைது செய்யக்கூடாது – டிஜிபி சுற்றறிக்கை!!

இந்த கல்வி அமைப்பை குறித்து பலருக்கும் சந்தேகம் உள்ளது, இன்னும் வருடங்கள் இணைக்கபட்டு உள்ளதாக ஆனால், அப்படி இல்லை, நாம் பின்பற்றும் அந்த முறையை தான், அவர்கள் பிரித்து உள்ளனர். நாம் பின்பற்றிய அமைப்பு 10 வருடங்கள் ஒன்றாகவும், பின்பு 2 வருடங்கள் உயர்கல்வி என்றும் பிரிக்கப்பட்டு இருந்தது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

school system changes
school system changes

ஆனால், இப்பொது அறிமுகமாகி உள்ள இந்த கல்வி அமைப்பின் மூலமாக முதலில், 5 வருடங்கள் குழந்தைப்பருவ வளர்ச்சி என்றும், 3 வருடங்கள் பள்ளிப்பருவ வளர்ச்சி என்றும், அடுத்த 3 வருடங்கள் ஆரம்ப உயர்நிலை, கடைசியாக 4 வருடங்கள் உயர்கல்வி நிலை என்று பிரிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்வி அமைப்பிற்கு 12 என்று பெயரிட்டு உள்ளனர்.

கற்றலில் என்ன என்ன மாற்றங்கள்:

அடிப்படை நிலை: அப்படிப்படை நிலை என்பது முதல் ஐந்து வருடங்கள். குழந்தைகளை நாம் பள்ளியில் சேர்க்கும் ஆண்டுகள். இந்த நிலைகளை, அங்கன்வாடி என்றும் பிலே ஸ்கூல் என்றும், அழைக்கப்படுகிறது. குழந்தைகள் பொதுவாக 3 முதல் 4 வயதிற்குள் இந்த பள்ளிகளில் சேர்க்கப்படுவர். இங்கு குழந்தைகளில் அறிவை வளர்க்கும், பிடித்தமானதைச்செய்யும், மொழி கற்பித்தலை கொண்டுஇருக்கும். இங்கு குழந்தைகள் படிப்பு மற்றும் விளையாட்டை சேர்த்து கற்றுகொள்வர்

தயாரிப்பு நிலை: இந்த நிலையில், குழந்தைகள் 8 வயது முதல் 11 வயது வரை கல்வி பயில்வர். அராபாத்தில் இருப்பதற்கும், இந்த நிலைக்கும் கொஞ்சம் மாற்றங்கள் இருக்கும். விளையாட்டு கொஞ்சம் கம்மியாக்கப்படும். குழந்தைகளுக்கு இந்த நிலையில், மூன்று மொழிப்பாடங்கள் நடத்தப்படும். இதில் கூடுதலாக குழந்தைகளின் மொழிஅறிவையும், அவர்களின் சமூக பழக்கவழக்கங்களையும் வளர்க்கும் விதமாக இருக்கும்.

new k 12 education structure
new k 12 education structure

மத்திய நிலை: இந்த நிலையில், குழந்தைகள் 11 வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் படிப்பர். அவர்கள் முழ நேரமாக கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு படிப்பர். இந்த புதிய கல்வி கொள்கை மாணவர்கள் வெறும் மனனம் மட்டும் செய்யாமல் புரிந்து படிக்க வழிவகை செய்யும் விதமாக உள்ளது. இந்த ஆண்டுகளில், அறிவியல், கணிதம், கலை, சமூக அறிவியல் மற்றும் மனிதநேயம் இந்த பாடங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டு உள்ளது.

மத்திய இரண்டாம் நிலை நிலை: இந்த நிலையில், படிக்கும் மாணவர்கள் அனைவரும், 14 முதல் 18 வயது வரை உள்ளவர்களாக இருப்பர். இந்த நிலைகளை குழந்தைகள் அவர்களுக்கு விருப்போமானா பாடங்களை தேர்வு செய்ய தகுதி உடையவர்களாக இருக்க வேண்டும் என்பது தான் இந்த புதிய கல்வி கொள்கையின் நோக்கம். அவர்களுக்கு, சரியான சிந்திக்கும் திறனும், முடிவினை தாங்களாகவே எடுக்கும் வல்லமையும் இருக்க வேண்டும்.

இந்த மாற்றங்கள் நடப்பு கல்வி ஆண்டுகளில் தான் உள்ளது, மேலும் தேர்வுகளில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்த கல்வி கொள்கையின் மூலம் குழந்தைகளின் செயல்திறன் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு என்னாச்சு? வெளியான முக்கிய தகவல்!!!

முன்னாள் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை முதன்மை அமர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -