60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – கோவையில் புதிய தொழில்நுட்ப பூங்கா!!

0

தமிழகத்தின் கோவை டைட்டில் பார்க்கில் 114 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தொழில்நுட்ப பூங்கா கட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த தொழில்கள் தமிழகத்தில் தழைத்தோங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த பூங்கா அமைய பெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் தொழில்நுட்ப தொழில்கள்:

தமிழகத்தில் தகவல் தொழிநுட்பம் மற்றும் தகவல் தொழிநுட்பவியல் சார்ந்த தொழில்கள் பெருக வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பல முயற்சிகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் கோவை மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 114 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டப்பட உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கான அடிக்கல்லை முதல்வர் பழனிசாமி இன்று நாட்டினார். அதே போல் திருச்சிராப்பள்ளி மாவட்டம், நாவல்பட்டு சிறப்பு பொருளாதார மண்டல வளாகத்தில் 48 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழிநுட்ப பூங்காவிற்கும் அடிக்கல் நாட்டினார்.

இது தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால் நிறுவப்பட உள்ளது. இந்த தொழிநுட்ப பூங்காக்கள் மூலமாக சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் ஆகிய இடங்களில் 8 தகவல் தொழிநுட்பம் மற்றும் அது சார்ந்த பொருளாதார நிறுவனங்கள் திறக்கப்படவுள்ளன.

சித்ராவிற்கு தொல்லை கொடுத்து வந்த அரசியல் பிரமுகர்!!

இந்த பூங்கா மூலமாக 20 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், 40 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. புதிதாக கட்டப்படவுள்ள பூங்கா தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் நிறுவனங்களுக்கு தகுந்த வசதிகளுடன் வாடகைக்கு விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here