ரூ. 5000 கோடி, 70 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு – 27 ஏக்கரில் சென்னையில் புதிய ஐடி பார்க்

0
DLF

தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னையில் DLF Downtown Project தரமணியில் ரூ. 5000 கோடி செலவில், 27 ஏக்கர் பரப்பளவில் புதிய ஐடி பார்க் ஒன்று கட்டப்படவுள்ளது. இதற்கான விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். 2008ம் ஆண்டு இது கட்டப்படுவதற்காக அனுமதிகள் பெறப்பட்டு பின்பு சில காரணங்களுக்காக நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Image result for whatsapp logo

வாட்ஸ்ஆப் இல் தகவல்களைப் பெறஇங்கே கிளிக்செய்யவும்

DLF உடன் இணையும் TIDCO

இந்த புதிய ஐடி பூங்காவிற்கான பணிகளை DLF குழுமத்துடன் இணைந்து தமிழக அரசின் டிட்கோவும் (Tamil Nadu industrial development corporation) மேற்கொள்ள உள்ளது. விழாவில் பேசிய முதலமைச்சர், ஜெயலலிதாவின் அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சியால் தொழில் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. மேலும் ஒரே ஆண்டில் 59 திட்டங்களை 2வது உலக முதலீட்டாளர் மாநாட்டில் இருந்து தமிழக அரசு பெற்றது. தமிழகத்தில் இதுவரையில் ரூ. 19 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 63 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

Image result for telegram logo

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

தமிழகத்தின் மிகப்பெரிய ஐடி பூங்கா..!

சென்னையில் தகவல் தொழில் நுட்பத்துறை பெரிதளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் தற்போதைய DLF Downtown Project மூலம் 70 ஆயிரம் பேருக்கு நேரடியாக வேலைவாய்ப்பு கிடைக்கவுள்ளது. சென்னை மனப்பாக்கத்தில் ஏற்கனவே 15 ஆண்டுகளாக இயங்கி வரும் டி.எல்.எஃப் சைபர் சிட்டி தமிழகத்தின் மிகப்பெரிய ஐ.டி. பூங்கா ஆகும். இந்த புதிய கட்டிட வேலைகளை வரும் 2025க்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Image result for youtube logo

யூடூப் சேனலில் தகவல்களைப் பெற இங்கே கிளிக்செய்யவும்

ஆண்டுக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம்..!

இப்புதிய திட்டம் குறித்து பேசிய டி.எல்.எஃப் நிறுவனத்தின் தலைவர் மோஹித் குஜ்ரால், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் முக்கியமான இடமாக இருக்கிறது சென்னை. இங்கு இருக்கும் திறமை மிக்கவர்களை கருத்தில் கொண்டு இந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதற்காக 5000 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாகவும் கூறினார்.

இதுவரை டி.எல்.எஃப் நிறுவனம் 331 மில்லியன் சதுர அடியில் 153 ரியல் எஸ்டேட் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும் சென்னை, ஹைதெராபாத், கூர்கான், சண்டிகர் மற்றும் கொல்கத்தா ஆகிய இடங்களில் இந்நிறுவனம் நிறுவியுள்ள ஐடி பார்க்கின் மூலம் வருடத்திற்கு 3 ஆயிரம் கோடி ரூபாய் வாடகை வருமானம் ஈட்டி வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here