புதிய டிஜிட்டல் விதிகளை ட்விட்டர் பின்பற்றவில்லை – உயர் நீதி மன்றத்தில் மத்திய அரசு தகவல்!!

0
FILE PHOTO: The Twitter App loads on an iPhone in this illustration photograph taken in Los Angeles, California, U.S., July 22, 2019. REUTERS/Mike Blake/File Photo

மத்திய அரசு அறிவித்த புதிய ஐடி விதிகளை ட்விட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை என வழக்கு விசாரணையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

 

இந்திய அரசு, சமூக வலைத்தளங்களான ட்விட்டர், வாட்ஸ் அப் போன்றவற்றிற்கு கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி புதிய டிஜிட்டல் கொள்கைகளை விதித்தது. இது தொடர்பாக பின்னர் பல சர்ச்சைகள் எழுந்தது. முதலில் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தள நிறுவனங்கள், புதிய டிஜிட்டல் கொள்கைகளுக்கு உடன்படத் தாமதித்தது, வாட்ஸ்அப் நீதிமன்றத்தை நாடியது என பல பிரச்னைகளைச் சந்தித்தது இந்தியா.

அதன் பின்னர் அந்நிறுவனங்கள் மத்திய அரசின் விதிகளை ஏற்பதாக அறிவித்தது. சமீபத்தில் இந்த விதிகளுக்கு ஏற்ப கூகுள் தன்னுடைய முதல் அறிக்கையையும் தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த புதிய டிஜிட்டல் சட்டங்களை ட்விட்டர் நிறுவனம் பின்பற்றவில்லை என டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தேசிய குழந்தைகள் நல ஆணையத்தின் புகார், காவல்துறை வழக்குப்பதிவு என சமீப காலமாக ட்விட்டர் நிறுவனம் நெருக்கடியை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here