கோதுமை ஹல்வா, பன் ஹல்வா சாப்பிட்டு இருப்பீங்க, கார்ன் ஹல்வா சாப்பிட்டு இருக்கீங்களா?? இதோ உங்களுக்காக!!

0
கோதுமை ஹல்வா, பன் ஹல்வா சாப்பிட்டு இருப்பீங்க, கார்ன் ஹல்வா சாப்பிட்டு இருக்கீங்களா?? இதோ உங்களுக்காக!!
கோதுமை ஹல்வா, பன் ஹல்வா சாப்பிட்டு இருப்பீங்க, கார்ன் ஹல்வா சாப்பிட்டு இருக்கீங்களா?? இதோ உங்களுக்காக!!

அல்வா நாலே நமக்கு முதலில் ஞாபகம் வருவது திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா தான் . இனி நாம அல்வா சாப்பிடுவதற்கு திருநெல்வேலி வரை போக வேண்டிய அவசியம் இருக்காது ஏன்னா இப்போ நாம செய்யப் போறது அல்வா ரெசிபி தான். ஆனா கொஞ்சம் டிஃபரண்டா கார்ன் ப்ளார் மாவை வைத்து திருநெல்வேலி ஸ்டைலில் எப்படி அல்வா செய்யுறது என வாங்க பார்க்கலாம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

தேவையான பொருட்கள்:

1. சோளம் மாவு _ 250 கிராம்

2. சர்க்கரை. _ 500 கிராம்

3. ஏலக்காய் தூள் _ 25 மில்லி

4. நெய் _ 150 கிராம்

5. சிவப்பு ஃபுட் கலர் _ தேவையான அளவு

6. உலர் திராட்சை, முந்திரி பருப்பு 50 கிராம்.

செய்முறை :

ஒரு பாத்திரத்தை எடுத்து அதில் தண்ணீருடன் கார்ன்(சோளம்)மாவு,சர்க்கரையும், ஃபுட் கலர்,ஏலக்காய் தூள், சேர்த்து நன்றாக கட்டி இல்லாமல் கலந்து கொள்ளவும் பிறகு அதை கடாயில் ஊற்றி கட்டி சேர விடாமல் கிளறவும். நன்றாக ஜெல்லி பதம் வரும் வரை கிண்டவும். இன்னொரு கடாயில் நெய் சேர்த்து முந்திரிப்பருப்பு ,உலர் திராட்சைகளை வறுத்து, அதை அல்வாவில் சேர்த்து 5 நிமிடங்களுக்கு கழித்து இறக்கி வைத்தால் சுடச்சுட கார்ன் ப்ளார் அல்வா தயாராகிவிடும். பின் அல்வாவை ஒரு தட்டில் நெய் தடவி அதில் ஊற்றி ஆறியதும், சிறு சிறு துண்டுகளாக கட் செய்து பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here