காரசாரமான இடிச்சு அரைச்சு செஞ்ச ஆட்டுக்கால்.. நாக்குல எச்சி ஊறுது.., ஒரு தடவை இப்படி ட்ரை பண்ணுங்க!!

0
காரசாரமான இடிச்சு அரைச்சு செஞ்ச ஆட்டுக்கால்.. நாக்குல எச்சி ஊறுது.., ஒரு தடவை இப்படி ட்ரை பண்ணுங்க!!
காரசாரமான இடிச்சு அரைச்சு செஞ்ச ஆட்டுக்கால்.. நாக்குல எச்சி ஊறுது.., ஒரு தடவை இப்படி ட்ரை பண்ணுங்க!!

என்னதான் இப்ப புதுசு புதுசா அயல்நாட்டு உணவான சிக்கன் ஃப்ரைட் ரைஸ், நூடுல்ஸ், இந்த மாதிரி வந்தாலும் நம்ம எல்லாருடைய ஆல் டைம் பேவரட்டா இருக்கும், ரெசிபி தான் மட்டன் பாயா. இந்த மட்டன் பாயா டேஸ்ட்டுக்காக ‌மட்டும் இல்லாமல் உடம்புக்கு மிக ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட டேஸ்ட், ஹெல்த்தி ரெசிபியான மட்டன் பாயா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • ஆட்டுக்கால்‌‌ -1 ஜோடி
  • பட்டை கிராம் – சிறிதளவு
  • இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் -1 டீஸ்பூன்
  • கசகசா -1 டீஸ்பூன்
  • பச்சை மிளகாய் – 4
  • தேங்காய் – 1/2
  • சோம்பு-1 டீஸ்பூன்
  • சின்ன வெங்காயம் – 100 கிராம்
  • தக்காளி – 2

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

செய்முறை

ஆட்டுக்கால் பாயா செய்வதற்கு ஆட்டுக்காலை சுத்தம் செய்து ஒரு குக்கரில் போட்டு அதோடு கொஞ்சம் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் இஞ்சி வெள்ளை பூண்டு பேஸ்ட், நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து ஆறு விசில் வரும் வரை வேக விட்டு அடுப்பை ஆப் செய்யவும்.

பின் மிக்ஸி ஜாரில் தேங்காய், ஒரு ஸ்பூன் கசகசா, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து பேஸ்டாக அரைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு கடாய் எடுத்து அதில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து பட்டை கிராம்பு போட்டு தாளித்து, அத்துடன் சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன், தக்காளி சேர்த்து வதக்கவும்.

அதில் 1 ஸ்பூன் இஞ்சி வெள்ளை பூண்டு பேஸ்டை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு நாம் குக்கரில் வேக வைத்துள்ள ஆட்டு எலும்பை கடாயில் சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு, அடுப்பை ஆஃப் செய்யவும். இப்போ நமக்கு சுட சுட சுவையான ஆட்டு கால் பாயா ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here