2020 ‘Hyundai Verna Facelift’ மூன்று விதமான வேரியண்ட்களில் அறிமுகம்..!

0

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் வெர்னா மாடலின் புதிய ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. புதுமையான டிசைன் மற்றும் அதிகளவிலான தொழிற்நுட்ப வசதிகளை கொண்டுள்ளதால் செடான் பிரிவில் சிறப்பான விற்பனை எண்ணிக்கைகளை 2020 வெர்னா ஃபேஸ்லிஃப்ட் வெர்சன் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வெர்னா ஃபேஸ்லிஃப்ட் சிறப்புகள்..!

எஸ், எஸ்எக்ஸ் மற்றும் எஸ்எக்ஸ் (ஒ) என்ற மூன்று விதமான வேரியண்ட்களில் விற்பனையாகவுள்ள வெர்னா ஃபேஸ்லிஃப்ட், பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜின் தேர்வுகளையும் பெற்றுள்ளது. இந்த வகையில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் காரில் பொருத்தப்படவுள்ளன.

இதில் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் 115 பிஎச்பி பவரை 144 என்எம் மற்றும் 250 என்எம் டார்க் திறனுடன் முறையே வெளிப்படுத்தும் திறன் கொண்டவை.

இந்த இரு என்ஜின்களுடனும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளன. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினானது 120 பிஎச்பி பவரை 7-ஸ்பீடு டிசிடி ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் காருக்கு வழங்கவுள்ளது.

காரின் உட்புறம், தேவைக்கு ஏற்றாற்போல் மடக்கும் வசதி கொண்ட முன்புற இருக்கைகள், 8-இன்ச் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், ஆர்காமிஸ் சவுண்ட் சிஸ்டம், டர்ன் இண்டிகேட்டர்களுடன் பின்பக்கம் பார்க்கும் பக்கவாட்டு கண்ணாடிகள், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரில் ஓட்டுனருக்கு தேவையான தகவல்களை வழங்கக்கூடிய 4-இன்ச் டிஎஃப்டி திரை, சில கண்ட்ரோல்களை கொண்ட ஸ்டேரிங் சக்கரம் மற்றும் பெடல் ஷிஃப்டர்கள் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

விலை..!

புதிய வெர்னா ஃபேஸ்லிஃப்ட் எக்ஸ்ஷோரூமில் ரூ.9.30 லட்சத்தை ஆரம்ப விலையாக பெறவுள்ளது.

டாப் டர்போ-பெட்ரொல் வேரியண்ட் ரூ.13.99 லட்சத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here