ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) எலோன் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு, தொடர்ந்து பல அதிரடி மாற்றங்களை ட்விட்டர் பக்கத்தில் செய்து வருகிறார். சமீபத்தில் தான், ட்விட்டரின் அடையாளமாக திகழ்ந்த குருவி லோகோவை மாற்றி “X” தளமாக மாற்றி அமைத்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது, புதிய வசதிகளையும் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, தொலைபேசி எண் இல்லாமல் ஆடியோ மற்றும் வீடியோ கால்கள் செய்யும் வசதியை X தளத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த வசதியானது, ஆண்ட்ராய்டு, iOS, Mac, PC உள்ளிட்ட அனைத்து இயங்குதளங்களிலும் விரைவில் செயல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.