புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் மத்திய அரசு?? வேளாண்துறை அமைச்சர் விளக்கம்!!

0

டெல்லியில் கடந்த 2 வாரமாக வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் 6ம் கட்டமாக இன்று நடக்கவிருந்த பேச்சுவார்த்தையில் விவசாயசங்க பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. இதன் காரணமாக வேளாண் அமைச்சர் இன்று மாலை பத்திரிக்கையாளர்களை சந்திக்கவுள்ளார்.

விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்கள்:

மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளின் நலனுக்காக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் அம்மூன்று சட்டங்களும் விவசாயிகளின் வாழ்வை நாசமாக்கும் எனவும், தனியார் நிறுவனங்களுக்கு தான் வாழ்வதாரமாக இருக்கும் எனவும் கூறி அம்மூன்று சட்டங்களையும் அகற்ற கோரி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டம் 2 வாரங்களாக நீடிக்கும் நிலையில் 5 கட்டங்களாக பேச்சு வார்த்தை நடந்தினர். இந்த 5கட்டங்களாக நடந்த பேச்சுவார்த்தையில் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படாத நிலையில் 6ம் கட்டமாக இன்று பேச்சுவார்த்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. ஆனால் இந்த 6ம் கட்ட பேச்சுவார்த்தையில் யாரும் கலந்துகொள்ள போவதில்லை என விவசாய சங்கம் தெரிவித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அமித்ஷா தலைமையில் நடந்த கூட்டத்தில் 13 விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு ஆரம்பித்து 3மணிநேரமாக நடந்த அந்த கூட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு பாதகமாக நினைக்கும் அந்த 3 சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என கூறினார். ஆனால் அதை மறுத்த விவசாயசங்க பிரதிநிதிகள் 3சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் எந்த ஒரு திருத்தமும் மேற்கொள்ள தேவையில்லை என்றே கூறினார். அமித்ஷா உடனான பேச்சு வார்த்தையும் தோல்வியடைந்து.

பிப்., 24 இல் இந்தியா & இங்கிலாந்து இடையே பகலிரவு டெஸ்ட் போட்டி!!

இதனால் மத்திய அரசுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் இன்று மாலை 4 மணியளவில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதாக தெரிவித்தார். இந்த சந்திப்பில் விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கை விட்டு மத்திய அரசின் சட்டங்களை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும், மத்திய அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், விவசாயிகள் ஒத்துழைத்தால் 3 சட்டங்களிலும் திருத்தங்கள் மேற்கொள்ள முயற்சி எடுக்கப்போவதாகவும் அதற்கு விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என கூறியதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here