நாளை உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – அடுத்த புயலா?? பொதுமக்கள் அச்சம்!!

0
Cyclone
Cyclone

தமிழகத்தை தாக்கிய நிவர், புரெவி புயல்களை தொடர்ந்து நாளை தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இது புயலாக வலுப்பெறுமா என்பது குறித்து இன்னும் தகவல்கள் வெளியிடப்படாத நிலையில் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

புதிய புயலா??

இந்த வருடத்தில் எண்ணிடலங்கா துயரங்களை பொதுமக்கள் சந்தித்து வருகின்றனர். கொரோனா பரவல், கனமழை, வெள்ளப்பெருக்கு, புயல் என ஒவ்வொன்றாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதுமட்டுமின்றி ஊரடங்கு காரணமாக பலரும் வேலை இழந்து உரிய வருமானம் இன்றி உணவுக்கு கஷ்டப்படும் சூழலுக்கும் தள்ளப்பட்டு உள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ள நிலையில் அடுத்தடுத்து புயல்கள் உருவாகி வருவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சில நாட்களுக்கு முன்னர் சென்னை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களை புரட்டி போட்ட நிவர் புயலின் சுவடு மறைவதற்குள், அடுத்தடுத்தாக வங்கக்கடலில் புரெவி புயல் உருவானது. இதனால் கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் கடலோர, ஆற்றோரத்தில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். இப்புயல் இலங்கையில் இன்று கரையை கடந்து மீண்டும் வலுப்பெற்று பாம்பன் பாலத்தில் கரையை கடந்து வலுவடையும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யாவிட்டால் நாடெங்கும் லாரிகள் எதுவும் ஓடாது

இந்நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை நாளை உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே இரு புயல்களின் கோரத்தாண்டவத்தில் இருந்து மக்கள் மீளாத நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இது புயலாக வலுப்பெறுமா? அல்லது வலுவடைந்து விடுமா? என்பது குறித்த முழு விபரங்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here