இந்தியாவில் மேலும் 2 தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி – மோடி அரசின் அதிரடி அறிவிப்பு!!

0

இந்தியாவில் தற்போது தயாரிக்கப்பட்டுள்ள, இரண்டு புதிய தடுப்பூசிகளுக்கு ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புதிய ஊசிக்கு அனுமதி:

இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் எதிராக அரசின் கையில் இருக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி செலுத்துதல் மட்டுமே. தற்போது வரை இந்தியாவில், கோவாக்ஸின், கோவிஷீல்டு, ஸ்புட்னிக் வி உள்ளிட்ட தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. தற்போது புதிதாக கோவோவேக்ஸ், கோர்பிவேக்ஸ் என்ற இரண்டு புதிய தடுப்பூசிகளுக்கு மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. இதில் கோர்பிவேக்ஸ் தடுப்பூசி ஹைதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள உள்நாட்டு தடுப்பூசி ஆகும். இதேபோல் கோவோவேக்ஸ் தடுப்பூசி சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

தற்போது இந்த இரண்டு தடுப்பூசிகளோடு சேர்த்து, மோல்நுபிரவிர் மருந்துக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மக்கள் அதிகம் எதிர்பார்க்கும் ஸ்பைஸர் மற்றும் மாடர்னா உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு அனுமதி கிடைக்காத நிலையில், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட புதிய தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்திருப்பது பொதுமக்களுடைய வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here