புதிதாக இந்தியாவில் வரவிருக்கும் இரண்டு தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள்.. எங்கெங்கு தெரியுமா??

0

இந்தியாவில் புதிதாக ஐதராபாத் மற்றும் புனேவில் கூடுதலாக இரண்டு புதிய தடுப்பூசி ஆய்வகங்கள் திறக்கப்பட உள்ளன.

கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற தடுப்பூசி ஒன்றே சிறந்த தீர்வாக உள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதால் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் தற்போது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் தடுப்பூசிக்கான கொள்முதல் மற்றும் உற்பத்தியில் அதிக மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.  இந்நிலையில் இந்தியாவில் ஐதராபாத் மற்றும் புனேவில் கூடுதலாக இரண்டு தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கெனவே இமாச்சலபிரதேசத்திலும், நொய்டாவிலும் தடுப்பூசி ஆய்வகங்கள் உள்ளன. புதிதாக வரவுள்ள இந்த இரண்டு தடுப்பூசி பரிசோதனை ஆய்வகங்கள் அமைக்க தேவையான நிதி PM Cares நிதியிலிருந்து வழங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here