கொரோனா தாக்கத்திற்கான புதிய அறிகுறிகள் – மத்திய நோய்கட்டுப்பாடு மையம் அறிவிப்பு!!

0

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ள நிலையில் தொற்றுக்கான புதிய அறிகுறிகளை மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு வெளியிட்டு உள்ளது. எனவே இந்த புதிய அறிகுறிகள் உள்ளவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனா அறிகுறிகள்:

உலகத்தில் இதுவரை 1.15 கோடி பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், 5.36 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர். ஆறுதல் அளிக்கும் தகவலாக கொரோனா தொற்றில் இருந்து 65 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து உள்ளனர். இந்தியாவிலும் வைரஸின் வீரியம் அதிகரித்து பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து உள்ளது. ஏற்கனவே காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல், வறட்டு இருமல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் புதிதாக 5 அறிகுறிகளை மத்திய நோய்கட்டுப்பாடு மற்றும் தடுப்பு பிரிவு வெளியிட்டு உள்ளது. இந்த அறிகுறிகள் உள்ளவர்களும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு எச்சரிக்கப்பட்டு உள்ளது. அவை, தலைவலி,வாந்தி, வயிற்றுப் போக்கு, கெண்டைக்கால் பகுதியில் ஏற்படும் வலி மற்றும் வயிற்றுவலி ஆகிய அறிகுறிகளும் கொரோனா தொற்றிற்கான அறிகுறியாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here