Friday, March 29, 2024

ஒரே நாளில் 10 ஆயிரம் பேருக்கு அதிநவீன கொரோனா பரிசோதனை – பிரதமர் துவக்கி வைக்கிறார்!!

Must Read

ஒரே நாளில் 10,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யக்கூடிய அதிநவீன பரிசோதனை மையங்களை காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி இன்று மாலை திறந்து வைக்கிறார்.

கொரோனா தொற்று:

கடந்த சில நாட்களாக கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவலாக எல்லா நாடுகளையும் மக்களையும் அச்சுறுத்தி வருகிறது. அதன்படி, இந்தியாவில் மட்டும் கடந்த சில மாதங்களில் 14 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 32 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். இதனை தடுக்க மாநில, மத்திய அரசுகள் தீவிரமாக முயற்சித்து வருகின்றது.

அதன் அடிப்படையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாளில் 10,000 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யக்கூடிய சோதனை மையங்களை திறந்து வைக்க இருக்கிறார். இதன் மூலமாக பல பேருக்கு பரிசோதனை செய்வதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

சோதனை மையங்கள்:

இந்த சோதனை மையங்கள் கொல்கத்தா, நொய்டா மற்றும் மும்பை போன்ற இடங்களில் திறக்கப்பட உள்ளது. இந்த நிகச்சி இன்று மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது, இதில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷா வரதன் மற்றும் மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேஷ் மற்றும் மேற்கு வங்க முதல்வர்கள் காணொளி வாயிலாக பங்கேற்க உள்ளனர்.

கருப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டாஸ் – போலீசார் அதிரடி!!

Coronavirus testing methods
Coronavirus testing methods

இந்த சோதனை மையங்கள் வாயிலாக 24 மணிநேரத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம், ஒரு நாளில் 10,000 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளலாம், கொரோனா பாதிப்பு மட்டுமன்றி காசநோய், டெங்கு மற்றும் சைட்டோமெலகோவைரஸ் போன்ற பல வகையான நோய்களையும் கண்டு அறியலாம். இவ்வாறு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

SBI வங்கி வாடிக்கையாளர்களே.., உடனடியாக இந்த பணியை முடிக்க வேண்டும்.., இல்லனா சிக்கல் ஆகிவிடும்!!!

நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளில் நிகழும் மோசடிகளை தடுக்க வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சமீபத்தில்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -