இந்தியாவில் மேலும் 5 பேருக்கு புதிய வகை கொரோனா – அச்சத்தில் மக்கள்!!

0

உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா தொற்றால் ஏற்கனவே 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டநிலையில் தற்போது மேலும் 5 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.

உருமாறிய கொரோனா

பிரிட்டனிலிருந்து பரவிய மரபணு மாற்றம் பெற்ற புதிய வகை கொரோனா தற்போது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை பல்வேறு நாடுகளும் தடை செய்த நிலையில், இந்தியாவும் ஜனவரி 7 வரை பயணிகள் போக்குவரத்திற்கு தடை விதித்துள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் பிரிட்டனிலிருந்து வந்த 33,000 க்கும் மேற்பட்டவர்களை பரிசோதித்ததில் 20 பேருக்கு புதிய வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரின் மருத்துவ மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டதில் தற்போது மேலும் 5 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புனேவை சேர்ந்த 4 நபர்களுக்கும், டெல்லியை சேர்ந்த ஒருவருக்கும் புதிய வகை கொரோனா பாதித்தித்துள்ளது.

பஞ்சாயத்து தலைவரான துப்புரவு பணியாளர் – குவியும் வாழ்த்துக்கள்!!

இந்த 25 பேரில் தமிழகத்தை சேர்ந்த ஒரு நபரும் அடங்குவார். புவனேஸ்வர்,பெங்களூரூ,ஹைதராபாத் உள்ளிட்ட 10இடங்களில் ஆய்வு நடந்துவருகிறது. புதிய கொரோனா குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் புதிய வைரஸால் பாதிக்கப்பட்ட 5 பேரும் மருத்துவமனை தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கபட்டு வருகின்றனர் எனவும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here