இனி குடிசை மாற்று வாரியம் இந்த பெயரில் தான் அழைக்கப்பட வேண்டும் – புதிய மாற்றத்தை கொண்டு வந்த தமிழக முதல்வர்!!

0
இனி குடிசை மாற்று வாரியம் இந்த பெயரில் தான் அழைக்கப்பட வேண்டும் - புதிய மாற்றத்தை கொண்டு வந்த தமிழக முதல்வர்!!
இனி குடிசை மாற்று வாரியம் இந்த பெயரில் தான் அழைக்கப்பட வேண்டும் - புதிய மாற்றத்தை கொண்டு வந்த தமிழக முதல்வர்!!

இன்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அவர்கள், “குடிசை மாற்று வாரியத்தின் பெயரானது மாற்றப்பட்டு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று அழைக்கப்படும்” என்கிற அறிவிப்பை அறிவித்துள்ளார்.

சட்ட பேரவை:

தமிழகத்தில் தி.மு.க கட்சியானது கடந்த 10 வருடங்களுக்குப் பிறகு ஆட்சியை கைப்பற்றியது. இதில் முதல்முறையாக மு.ஸ்டாலின் அவர்கள் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இவர் ஆட்சியமைத்த பிறகு மக்களுக்கான பல்வேறு சிறப்பான திட்டங்களை நிறைவேற்றி வருகிறார். இதில் முக்கியமானதாக கூறப்படுவது மகளிருக்கான இலவச பேருந்து திட்டம். இத்திட்டமானது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது.

இனி குடிசை மாற்று வாரியம் இந்த பெயரில் தான் அழைக்கப்பட வேண்டும் - புதிய மாற்றத்தை கொண்டு வந்த தமிழக முதல்வர்!!
இனி குடிசை மாற்று வாரியம் இந்த பெயரில் தான் அழைக்கப்பட வேண்டும் – புதிய மாற்றத்தை கொண்டு வந்த தமிழக முதல்வர்!!

இப்படி பல்வேறு திட்டங்களை நடைமுறைபடுத்தி மக்களிடையே பெரும் செல்வாக்கை பெற்றுவரும் இவர் சட்டப்பேரவையில் இன்று சில புதிய மாற்றங்களை கொண்டுவந்துள்ளார். அதன் படி பேரவையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஆகிவற்றின் மீதான மானிய கோரிக்கை குறித்து விவாதமானது நடைபெற்றது.

இனி குடிசை மாற்று வாரியம் இந்த பெயரில் தான் அழைக்கப்பட வேண்டும் - புதிய மாற்றத்தை கொண்டு வந்த தமிழக முதல்வர்!!
இனி குடிசை மாற்று வாரியம் இந்த பெயரில் தான் அழைக்கப்பட வேண்டும் – புதிய மாற்றத்தை கொண்டு வந்த தமிழக முதல்வர்!!

அப்போது பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இனி குடிசை மாற்று வாரியமானது “தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் தமிழ்நாட்டில் 9 இடங்களில் மொத்தமாக ரூ. 950 கோடியில் சுமார் 6,000 குடியிருப்புகளை கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக குடிசை மாற்றுவாரிய கொள்கையின் விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here