நாடு முழுவதும் வர்த்தகம் மற்றும் வீட்டு பயன்பாட்டுக்கு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி மக்களின் அன்றாட வாழ்க்கையில் முக்கிய பங்கு வைக்கும் சிலிண்டர் விலை நாளுக்கு நாள் மாற்றம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. ஆனால் கடந்த சில மாதங்களாக மாற்றம் ஏற்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு சிலிண்டர் விலையை குறைப்பதாக அறிவித்தனர். இதையடுத்து சிலிண்டர் ஒன்றுக்கு ரூபாய் 200 குறைக்கப்பட்டது. அதேபோன்று வர்த்தக சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நிர்ணயிக்கப்பட்ட சிலிண்டர் விலை பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை ரூ. 918.5, கோவை – ரூ. 932, மதுரை – ரூ. 944, ஈரோடு – ரூ. 937.5, காஞ்சிபுரம் – ரூ. 921, கடலூர் – ரூ. 939, தர்மபுரி – ரூ. 941, தஞ்சாவூர் – ரூ. 939, திருவள்ளூர் – ரூ. 918.5, திருச்சி – ரூ. 949, திண்டுக்கல் – ரூ. 945, திருநெல்வேலி – ரூ. 968.5, திருப்பூர் – ரூ. 940.5, திருவண்ணாமலை – ரூ. 918.5, திருவாரூர் – ரூ. 924, தேனி – ரூ. 960.5, கரூர் – ரூ. 957.5, அரியலூர் – ரூ. 940.5, நாகப்பட்டினம் – ரூ. 924, நாகர்கோவில் – ரூ. 987, நாமக்கல் – ரூ. 949.5, ஊட்டி – ரூ. 949.5, பெரம்பலூர் – ரூ. 958.5, புதுக்கோட்டை – ரூ. 949, ராமநாதபுரம் – ரூ. 952.5, சேலம் – ரூ. 936.5, சிவகங்கை – ரூ. 958, வேலூர் – ரூ. 940, விழுப்புரம் – ரூ. 920, விருதுநகர் – ரூ. 944.