சென்னை மெட்ரோ ரயிலில் இனி இது கிடையாது.., அது தான்.., அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!!

0
சென்னை மெட்ரோ ரயிலில் இனி இது கிடையாது.., அது தான்.., அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!!
சென்னை மெட்ரோ ரயிலில் இனி இது கிடையாது.., அது தான்.., அதிகாரி வெளியிட்ட முக்கிய தகவல்!!

சென்னையில் முதல் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து நாள்தோறும் சென்ட்ரல் to பரங்கிமலை, விம்கோ நகர் to விமான நிலையம் ஆகிய இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் புறநகர் ரயில்களை போல மெட்ரோ ரயில்களிலும் பயணிகள் அதிகரித்து வருகின்றனர். அதேபோல் அலுவலக நேரங்களில் மெட்ரோ ரயிலில் பயணிகள் நெரிசலில் சிக்கி தவிக்கும் அவல நிலையும் உருவாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் அதிகப்படியான பெட்டிகளை சேர்க்க வேண்டும் என பல தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தற்போது இந்த கோரிக்கைக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் செவி சாய்த்துள்ளது. அதாவது தற்போது 4 பெட்டிகளை கொண்ட 42 மெட்ரோ ரயில்கள் 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வருகிறது. இதனோடு பீக் ஹவர்ஸ்களில் மட்டும் 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் 2.5 நிமிட இடைவெளியில் இயக்க உள்ளதாக மெட்ரோ நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வுக்கு முன் இதை செஞ்சே ஆகணும்.., ஆசிரியர்களுக்கு தேர்வுத்துறை அதிரடி உத்தரவு!!!

இதில் பெரும்பாலும் முதல் தர வகுப்பு பெட்டி கொண்ட ரயில்கள் இயக்கப்படும் என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இதில் பயணம் செய்பவர்களுக்கு வழக்கமான டிக்கெட் விலையை விட இரட்டிப்பாக கட்டணம் வசூல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரைவில் விரிவான திட்ட அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here