மக்களுக்கு ஜாக்பாட்.,இனி நிமிஷத்துக்கு ஒரு பஸ் கிடைக்கும்! போக்குவரத்து துறையின் திடீர் முடிவு!!

0
மக்களுக்கு ஜாக்பாட்.,இனி நிமிஷத்துக்கு ஒரு பஸ் கிடைக்கும்! போக்குவரத்து துறையின் திடீர் முடிவு!!
மக்களுக்கு ஜாக்பாட்.,இனி நிமிஷத்துக்கு ஒரு பஸ் கிடைக்கும்! போக்குவரத்து துறையின் திடீர் முடிவு!!

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்தை மேம்படுத்த புதிய யுக்தியை சென்னை போக்குவரத்து கழகம் கையாள உள்ளது.

பேருந்து போக்குவரத்து:

தமிழ்நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகை வளர்ச்சிக்கேற்ப பொது போக்குவரத்துகளை அரசு மேம்படுத்தி வருகிறது. ஆனால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் நெரிசல் மிகு நேரங்களிலும், பண்டிகை காலங்களிலும் போதிய பேருந்து சேவைகள் இல்லாமல் பொதுமக்கள் திணறி வருகின்றனர். இதனால் சென்னையின் முக்கிய பகுதிகளில் தொகுப்பூதிய முறையில் தனியார் பேருந்துகளை இயக்க சென்னை போக்குவரத்து துறை முடிவு திட்டமிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது சென்னையில் 625 வழித்தடங்களில் சுமார் 3,436 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதோடு சென்னை நகர்ப்புற சேவை திட்டத்தின் கீழ் 1000 தனியார் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளருக்கு கி.மீ.க்கு குறிப்பிட்ட தொகை வழங்கலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்த அடிப்படையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 500 தனியார் பேருந்துகளை இயக்க சர்வதேச வங்கிகளிடம் நிதியுதவி பெற உள்ளதாகவும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பன்னாட்டு மருத்துவத்தையும் மிஞ்சும் இந்திய மருத்துவ சிகிச்சைகள்., பிரதமர் மோடி புகழாரம்!!

தற்போது இதற்கான டெண்டர் பணி தொடங்க உள்ள நிலையில் பொது போக்குவரத்தை தனியார் வசம் ஒப்படைக்க கூடாது என தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு போராட்டம் மேற்கொண்டுள்ளனர். மறுமுனையில் இத்திட்டத்திற்கு வரவேற்பும் எழுந்து வருகிறது. எனவே இதுகுறித்த பேச்சுவார்த்தை கூடிய விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here