வாகன பதிவில் இனி புதிய முறை – அமலுக்கு வந்த மத்திய அரசின் புதிய திட்டம்!!

0

வாகனப் பதிவில் BH (Bharat Series) என்ற புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு BH என்ற வரிசையில் பதிவு செய்யும் வாகனங்களை மறு பதிவு செய்யாமல் எந்த மாநிலத்திலும் இயக்கலாம்.

இது குறித்து மத்திய போக்குவரத்துத்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “உரிமையாளர் மாநிலம் விட்டு மாநிலம் மாறும்போது மீண்டும் பதிவு செய்வதை தவிர்க்க பிஎச் பதிவெண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய முறையின் மூலம் வாகன உரிமையாளர், வேறு மாநிலங்களுக்கு செல்லும்போது வாகன எண்ணை மறுபதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. வாகன சான்றிதழ்களை பெற உள்ளூர் அரசு அலுவலகத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த புதிய BH முறை மத்திய, மாநில அரசு ஊழியர்கள் பாதுகாப்பு துறையினருக்கு மட்டும் செய்லபடுத்தப்படுகிறது.

ஒரு மாநிலத்தில் இருந்து மறு மாநிலத்திற்கு செல்லும்போது வாகன மறுபதிவு போன்றவற்றால் வாகன ஓட்டிகள் சில சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தற்போது இந்த புதிய முறை அதை களைந்துள்ளது. இதனால் இந்த திட்டம், வாகன ஓட்டிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here