Friday, April 19, 2024

ஒரே பட்டனில் ஜி-மெயிலில் இருந்து அனைத்து வசதிகள் – ஜி- சூட் -ல் புதிய சலுகைகள்..!!

Must Read

ஜி – சூட் எனப்படும் நிறுவனங்களுக்கான கூகிள் மென்பொருளில், மெயில்களையும், மெசேஜ்களையும் இணைக்கும் புதிய மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. சாதாரண தனிநபர் மெயில்களுக்கு ஹாங்கவுட்ஸ் இருப்பது போல் இதிலும் புது வசதி.

வீட்டில் இருந்தே எளிமையாகும் சந்திப்புகள்:

கொரோனா நோய் தொற்று காரணமாக பல நிறுவங்கள் தங்கள் வேலைகளை வீட்டில் இருந்த படியே செய்ய தகுந்த ஏற்பாடுகள் செய்து வருகின்றன. இந்நிலையில், வீட்டில் இருந்து வேலை செய்யும் பொழுது குழு சந்திப்புகளுக்கு பல்வேறு மென்பொருள்கள் வந்த வண்ணம் உள்ளன.

Gmail clever Tricks
Gmail clever Tricks

கூகிள் கம்பெனியின் ஒரு மென்பொருளான ஜி – சூட் நிறுவனங்களுக்கு பல்வேறு வசதிகளுடன் தொலை தொடர்பு சேவைகள் செய்து வருகின்றன. இதை மேம்படுத்தும் பொருட்டு தற்போது மின்னஞ்சல்கள் சேவையிலேயே பேசும் வசதியும், வீடியோ கால், மற்றும் சந்திப்புகள் வைக்கும் வசதியை உருவாக்கி உள்ளது.

ஒரே நேரத்தில் இரண்டும்:

இதில் சிறப்பு அம்சமாக இந்த அரட்டை ரூம்கள் மற்றும் சந்திப்புகளில் பைல்கள், டாக்குமென்டுகள், லிங்குகள் மற்றும் பலவற்றை பகிர்ந்து கொள்ளலாம். மேலும், வீடியோ காலில் பேசும்போதே குழு உடன் சேர்த்து ஒரே பைலில் வேலை பார்க்க ஏதுவாக, ஒரு புறம் வீடியோ காலும் மற்றொரு புறம் பைலில் செய்யப்படும் வேலைகளை பார்க்கவும் அமைப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இது நிறுவன ஊழியர்களுக்கு வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“DO NOT DISTURB” மற்றும் “OUT OF OFFICE”:

G Suite
G Suite

புதியதாக “DO NOT DISTURB” மற்றும் “OUT OF OFFICE” போன்ற சேவைகளும் இடம்பெறுகின்றன. இவை நம்மை தொந்தரவு செய்யாமல் இருக்கவும், வேலை நேரம் முடிந்ததை குறிப்பிடவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வீட்டில் இருந்து வேலை செய்வதை மற்றும் நிருவனகளுள் உள்ள குழு சந்திப்புகளுகும் பெரும் வாரமாக இருக்கும் என்பதில் அய்யம் ஏதும் இல்லை.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

லோக்சபா தேர்தல் எதிரொலி: சென்னை தாம்பரம் to நெல்லைக்கு சிறப்பு ரயில்., தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, நாளை (ஏப்ரல் 19) நடைபெற உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தங்கி இருப்பவர்கள்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -