தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் அனைவருக்கும் ரூ.1000 உரிமைத் தொகை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15 ஆம் தேதிக்கு பதிலாக இன்று முதல் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இது தவிர மேல்முறையீடு செய்தவர்களில் கிட்டத்தட்ட 7.35 லட்சம் பேர் இரண்டாவது கட்டமாக உரிமைத் தொகைக்கு தகுதி வாய்ந்தவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் இன்று முதல் ரூ.1000 வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
தமிழக ரயில் பயணிகளுக்கு எச்சரிக்கை., தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
இந்நிலையில் ஒரு சிலருக்கு ரூ.1000 உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவில்லை என புகார்கள் வந்துள்ளது. இதை அடுத்து முதலமைச்சர் கூறியதாவது, கலைஞர் உரிமைத் தொகை திட்டம் எந்த ஒரு பிரச்சனையை ஏற்படுத்தாமல் தகுதி வாய்ந்த அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் அவர்களது வங்கி கணக்கில் சென்றடையும் வகையில் அதிகாரிகளும், ஊழியர்களும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். எனவே கட்டாயம் இன்று மாலைக்குள் தகுதியுடைய அனைவருக்கும் ரூ.1000 வந்து சேர்ந்துவிடும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.