மெட்ரோ பயணிகளே.., அறிமுகமாகும் புதிய திட்டம்.., இனி கவலை வேண்டாம்.., வெளியான நியூ அப்டேட்!!

0
மெட்ரோ பயணிகளே.., அறிமுகமாகும் புதிய திட்டம்.., இனி கவலை வேண்டாம்.., வெளியான நியூ அப்டேட்!!
மெட்ரோ பயணிகளே.., அறிமுகமாகும் புதிய திட்டம்.., இனி கவலை வேண்டாம்.., வெளியான நியூ அப்டேட்!!

சென்னை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் மெட்ரோவில் பயணிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பயணிகளின் வசதிக்கேற்ப அந்தந்த மெட்ரோ நிர்வாகம் புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் இப்போது பெங்களூர் மெட்ரோ நிர்வாகம் பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில் புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது மெட்ரோவில் இருந்து வெளியே வரும்போது பயணிகள் தாங்கள் செல்லும் இடங்களுக்கு ஆட்டோ, கேப், பேருந்து போன்றவற்றின் மூலம் செல்ல வேண்டி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆனால் சரியான நேரங்களில் ஆட்டோ, பேருந்து போன்றவை கிடைக்காததால் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். இதனால் இதுபோன்ற சிரமங்களை குறைக்க மெட்ரோ மித்ரா என்ற திட்டத்தை அக்னிபு டெக்னாலஜிஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த மெட்ரோ மித்ரா திட்டம் என்னவென்றால், மெட்ரோவை விட்டு பயணிகள் இறங்கியவுடன் அங்கே மெட்ரோ மித்ரா க்யூ ஆர் கோடு இருக்கும். அதை ஸ்மார்ட் போனில் ஸ்கேன் செய்தால், உடனே அருகில் உள்ள லேண்ட்மார்க்கை காண்பிக்கும். அதில் நாம் எந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதை தேர்வு செய்தால் உடனடியாக நம் மொபைலுக்கு ஒரு OTP வரும்.

தமிழக பேருந்து பயணிகளே…, பயண கட்டணத்தை அதிரடியாக குறைத்த அரசு…., வெளியான முக்கிய அப்டேட்!!

இந்த தகவல் நம் அருகில் உள்ள ஆட்டோ ஓட்டுநருக்கு சென்று விடும். உடனே அவர்கள் நீங்கள் இருக்கும் இடத்திற்கே வந்து உங்களது OTP யை பகிர்ந்து கொண்டு நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்வார்கள். மேலும் இதற்கான கட்டணம் குறைவு தான் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த மெட்ரோ மித்ரா சேவையை பயன்படுத்தினால் கூடுதலாக 10 ரூபாய் மட்டும் செலுத்த செலுத்த வேண்டும். இதற்கான சோதனை ஓட்டம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் 6ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here