தமிழக விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யும் பணியை அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொண்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகளிடம் இருந்து பெற்ற நெல்லை அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு மாதம் தோறும் இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகிறது.
கலாபவன் மரணத்தில் மர்மம்., போலீசார் சொன்ன திடுக்கிடும் தகவல்., அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!
இந்நிலையில் கடந்த சீசனில் நெல் கொள்முதல் 8.35 லட்சம் டன்னாக இருந்த நிலையில் இந்த சீசனில் 5.28 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் கடந்த சீசனை விட இந்த சீசனில் 3 லட்சம் டன்னுக்கு மேல் நெல் சாகுபடி குறைந்ததால் இனி வரும் நாட்களில் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் இலவச அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என தெரிவித்துள்ளனர். இதனால் இனி வரும் நாட்களில் இலவச ரேஷன் அரிசி கிடைக்குமா என பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.