தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குட் நியூஸ்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

0
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு குட் நியூஸ்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழக அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் மனரீதியான பிரச்சனை, பாலியல் தொந்தரவு, பள்ளிகளில் ஏற்படும் பிரச்சனை போன்றவற்றை குறித்து புகார் அளிக்க 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த எண்ணுக்கு தினம் தோறும் 600க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் பொது தேர்வுகள் கூடிய விரைவில் துவங்க உள்ளதால் மாணவர்கள் மிகுந்த அழுத்தத்திற்கு தள்ளப்படுவார்கள்.
இதனால் அவர்கள் எந்நேரமும் இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது மன அழுத்தங்களை தெரிவிக்கும் வகையில் சூப்பரான ஏற்பாடு ஒன்றை செய்துள்ளனர். அதாவது இதுவரை உதவி மைய ஆலோசகர்களின் எண்ணிக்கை 20 ஆக இருந்த நிலையில் தற்போது அதை 75 ஆக உயர்த்தியுள்ளனர். இதன் மூலம் மாணவர்கள் எந்த நேரத்திலும் உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டாலும் நிச்சயம் அவர்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள். இதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தேவையில்லாத மன அழுத்தத்தை சந்திக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here