கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

சமீபத்தில் கூட மேல்முறையீடு செய்தவர்களில் யார் தகுதி வாய்ந்தவர் என்பதற்காக குறுஞ்செய்தி அவர்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பப்பட்டது. தற்போது இதைத்தொடர்ந்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது மேல்முறையீடு செய்த தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் அனைவருக்கும் இன்று முதல் அவர்களது வங்கி கணக்கில் ரூ.1000 வரவு வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.