29 ரூபாய்க்கு வோடபோன் & ஐடியாவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்..!

0
Vodafone Idea
Vodafone Idea

வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனம் தங்களது ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 29 ரூபாய்க்கு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. 14 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இத்திட்டத்தின் முழு விபரங்களை காணலாம்.

சலுகை அறிவிப்பு:

ஆல்ரவுண்டர் எனும் பெயரில் வோடபோன் நிறுவனமும், ரேட்கட்டர் என ஐடியா நிறுவனமும் இந்த புதிய 29 ரூபாய் ரீசார்ஜ் சலுகையை அறிவித்து உள்ளனர். இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 100 எம்பி டேட்டா, 20 ரூபாய் டாக்டைம் ஆகியவை 14 நாட்கள் வேலிடிட்டி உடன் கிடைக்கும். 20 ரூபாய் டாக்டைம் அழைப்புகளை மேற்கொள்ள மற்றும் எஸ்எம்எஸ் அனுப்ப பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த புதிய சலுகையில் உள்ளூர் மற்றும் வெளியூர் அழைப்புகளுக்கு ஒரு நொடிக்கு 2.5 பைசா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 14 நாட்கள் வேலிடிட்டி உடன் மொபைல் டேட்டா மற்றும் டாக்டைம் உடன் வருவதால் நல்ல வரவேற்பைப் பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் டெல்லி வட்டாரத்தில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள இந்த திட்டம் விரைவில் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டுவரப்பட உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here