‘வாழ்க்கையில் அந்த மாறி மட்டும் பண்ணவே மாட்டேன்’ – பிரபல நடிகை ஓபன் டாக்!!

0

பிரபல திரைப்பட நடிகையான சார்மி தனக்கு 33 வயதாகியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவை எனது வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை:

தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான காதல் அழிவதில்லை படம் மூலம் அறிமுகமான நடிகை சார்மி, அதன் பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் என நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். தொடர்ந்து காதல் கிசுகிசு, ஆஹா எத்தனை அழகு, 10 எண்றதுக்குள்ள உள்ளிட்ட படங்களில் நடித்தார். தெலுங்கில் அதிக படங்களில் நடித்துள்ளார். புது படத்தில் நடிக்க வாய்ப்பில்லாமல் இருக்கும் சார்மி தற்போது தயாரிப்பில் களமிறங்கியுள்ளார்.

அதன்படி முன்னணி நடிகர் விஜய் தேவர்கொண்டா நடிக்கும் ‘லிகர்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகை சார்மி திருமணம் செய்து கொள்ள போகிறார் என்று சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது. இதை மறுக்கும் விதமாக அவர் கூறும்போது, ‘தற்போது சிறந்த வேலையில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்;

ஆகையால் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற தவறான முடிவை என் வாழ்க்கையில் எப்போதும் எடுக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். போலியாக எழுதுபவர்கள், வதந்திகள் ஆகியவற்றுக்கு குட் பை, சுவாரஸ்யமான கதைகளை உருவாக்குவதில் நீங்கள் சிறந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here