கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏர்டெல், ஜியோ, வோடபோன் உள்ளிட்ட நெட்வொர்க் சேவைகளின் இணைய வேகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்தியாவில் வாட்ஸ் ஆப் சேவை மற்றும் யூடியூப் வசதிகளுள் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது..
வாட்ஸ் ஆப் கட்டுப்பாடு..!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தியுள்ளதால் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் வாட்ஸ்ஆப் சர்வர் வேகத்தைக் குறைக்க வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸில் வீடியோ பதிவை பதிவேற்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாட்டின்படி வாட்ஸ்ஆப்பில் 16 வினாடிகளுக்கு மேல் உள்ள வீடியோக்களை ஸ்டேட்டஸ் ஆக வைக்க முடியாது. இவ்வாறு செய்வதன் மூலமாக சர்வர் திறன் மேம்படும் எனப்படுகிறது.
அதிருப்தி..!
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஏற்கனவே யூடியூப் நிறுவனம் யூடியூப் தளத்தின் HD தரத்தை 480p க்கு வீடியோக்களின் அதிகபட்ச குவாலிட்டியாக நிர்ணயம் செய்துள்ளது. தற்போது இதனைத் தொடர்ந்து வாட்ஸ்ஆப் சேவை குறைக்கப்பட்டது வாடிக்கையாளர் மத்தியில் அதிருப்தியை உண்டாக்கி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |