இதிலும் காப்பியா?? அட்லீயின் காதலர் தின புகைப்படத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்!!

0

நடிகர் விஜயுடன் அடுத்தடுத்து படம் இயக்கி இந்திய சினிமா முழுவதும் புகழ் பெற்றவர் இயக்குனர் அட்லீ. இவர் எடுத்த அனைத்துப் படங்களும் இதுவரை பெரிய வெற்றியைப் பெற்றன. ஆனால் சில சினமா விமர்சகர்கள் இவர் பிற படங்களில் இருந்து காப்பி அடித்து படம் எடுக்கிறார் என கூறி வருகின்றனர்.

காதலர் தின போட்டோ..!

இந்நிலையில் அட்லீ நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு ட்விட்டரில் தனது மனைவி பிரியா அட்லீ உடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு Happy Valentines Day வாழ்த்துக்கள் கூறி இருந்தார்.

அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் அது இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹித் ஷர்மாவின் புகைப்படத்தை போன்று உள்ளதாக அவரை கலாய்த்து வருகின்றனர். படத்தில் தான் காப்பி அடிக்கிறார் என்றால் இதிலுமா என அவர்கள் கலாய்த்து வருகின்றனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here