வந்துட்டான்யா….. வந்துட்டான்யா.. மீண்டும் இணையத்தில் ட்ரெண்டாகும் நேசமணி…

0

கமல் ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் First Look ஐ தழுவி வெளியாகியுள்ள காமெடி நடிகர் வடிவேலுவின் நேசமணி Fan Made போஸ்டர் இணையத்தில் இவரின் ரசிகர்களால் படு வேகமாக வைரலாகி வருகிறது.

ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் விக்ரம் படத்தின் மிரட்டலான பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிர்கர்களின் அமோக வரவேற்பை பெற்றது. அந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கமல் ஹாசன், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் மூவரும் இடம்பெற்று இருப்பர். தற்போது மீம் கிரியேடர்ஸ் வடிவேலு வெர்ஷனில் அந்த போஸ்டரை உருவாக்கியுள்ளனர்.

இந்நிலையில் வடிவேலுவின் Fan Made நேசமணி போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில்  விக்ரம் போஸ்ட்டரை போன்று வடிவேலு, ரமேஷ் கண்ணா, சார்லி ஆகியோரை வைத்து இந்த போஸ்டரை வைகை புயலின் ரசிகர்கள் தயாரித்துள்ளனர். ஏற்கனவே இந்தியாவை தாண்டி உலக அளவில் #Prayfor Nesamani என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆனது. தற்போது மீண்டும் மீம் கிரியேடர்ஸ் நேசமணியை வைரலாக்கி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here