சிவகார்த்திகேயனின் வரிகளில் பாடும் நடிகர் விஜய் – பீஸ்ட் படத்தின் முதல் பாடலில் இவ்ளோ சிறப்பு இருக்கா!!

0

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் முதல் பாடலை சிவகார்த்திகேயன் எழுதி உள்ளதாகவும்,அதை விஜய் தன் சொந்த குரலில் பாட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பீஸ்ட் முதல் சிங்கிள்:

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம்  பீஸ்ட். விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இவர் போக இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு, அபர்ணா தாஸ்,அங்கூர் அஜித் விகால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், இது சம்பந்தப்பட்ட புகைப்படம் இயக்குனர் நெல்சனால் அண்மையில் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்ற இந்த போட்டோ, படு பயங்கரமாக வைரல் ஆனது. தற்போது,பீஸ்ட் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தயாராக இருப்பதாகவும், இதனை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாடலை நடிகர் விஜய் தன் சொந்த குரலில் பாட உள்ளார். தற்போது இந்த பாடல் எப்போது வெளியிடப்படும் என விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here